உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை கொன்று புதைத்த கணவர் ஓட்டம்

மனைவியை கொன்று புதைத்த கணவர் ஓட்டம்

துமகூரு, : குடும்ப தகராறில் மனைவியை கொன்று, உடலை வீட்டின் பின்புறம் புதைத்த, கணவர் தலைமறைவாகி விட்டார்.ஷிவமொகாவை சேர்ந்தவர் மாருதி, 22. துமகூரில் டேங்கர் லாரி டிரைவராக வேலை செய்தார். துமகூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ஷிவமொகாவின் ஜோதி, 28 என்பவரின் பழக்கம் கிடைத்தது. நாளடைவில் இருவரும் காதலித்தனர். கடந்த ஆண்டு திருமணம் செய்தனர்.திருமணத்திற்கு பின்னர் துமகூரு பாவகடாவில், வாடகை வீடு எடுத்து வசித்தனர். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையில் அடிக்கடி, குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இருவரும், சண்டையிட்டு கொண்டனர். ஆத்திரம் அடைந்த மாருதி, ஜோதியின் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் வீட்டின் பின்பக்கம் குழிதோண்டி புதைத்தார். நேற்று காலை அக்கம்பக்கத்தினர் மாருதி வீட்டிற்கு வந்தனர். இரவில் சண்டை போட்டது பற்றி கேட்டனர். ஜோதி வீட்டில் இல்லாததை கவனித்தனர். அவரை பற்றி கேட்ட போது, கொலை செய்து உடலை புதைத்ததாக கூறினார்.அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், மாருதியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பாவகடா போலீசார் அங்கு வந்து, ஜோதி உடலை மீட்டனர். தலைமறைவான மாருதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ