உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருட வந்தவர் அடித்து கொலை 

திருட வந்தவர் அடித்து கொலை 

பீதர்: பீதர் டவுன் பிரதாப் நகரில் வசிப்பவர் கோரக்நாத். இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் அதிகாலையில், நான்கு பேர் கும்பல் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோரக்நாத் கூச்சலிட்டார். திருட வந்த நான்கு பேரும் ஓட்டம் பிடித்தனர். மூன்று பேர் தப்பிய நிலையில், ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.கோரக்நாத்தும், அவரது உறவினர்கள் நான்கு பேர் சேர்ந்து, அந்த நபரை அடித்து, உதைத்தனர். இதுபற்றி அறிந்த நியூ டவுன் போலீசார் அங்கு சென்று, தாக்கப்பட்ட நபரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.விசாரணையில் உயிரிழந்தவர் பீதர் பழைய நவுபாத்தின் சந்தோஷ் நாகுரே, 31, என்பது தெரிந்தது. கொலை வழக்குப்பதிவு செய்த நியூ டவுன் போலீசார், கோரக்நாத் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை