உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டை ஆளும் சக்தி மோடிக்கு மட்டுமே

நாட்டை ஆளும் சக்தி மோடிக்கு மட்டுமே

துமகூரு, : ''நாட்டை ஆளும் சக்தி மோடிக்கு மட்டுமே உண்டு. சோமண்ணாவுக்கு ஓட்டு போட்டு, மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்,'' என ம.ஜ.த.,வின் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.துமகூரின் ஊர்திகெரேயில் நேற்று பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் கூட்டத்தில், தேவகவுடா பேசியதாவது:குமாரசாமியை முதல்வராக்கியது, சோனியா என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில், என்னை துமகூரில் நிறுத்தி, காங்கிரசார் தோற்கடித்தனர். அரசியலில் யாரையும் நம்ப முடியவில்லை.காங்கிரசின் வாக்குறுதி வலையில் விழ வேண்டாம். ஏழைகள், விவசாயிகள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். காங்கிரசார் போன்று பொய் வாக்குறுதிகளை அளித்து காலம் தாழ்த்தவில்லை.நாட்டை ஆளும் சக்தி மோடிக்கு மட்டுமே உண்டு. சோமண்ணாவுக்கு ஓட்டு போட்டு, மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 16, 2024 12:15

நாட்டை ஆட்டை போடும் சக்தி, காங்கிரஸ், திமுகவுக்கு மட்டுமே உண்டு ஆகையால் மக்களே, நாட்டை திறமையாக ஆள்பவர்களுக்கு உங்கள் வோட்டா, அல்லது திறமையாக ஆட்டை போடுபவர்களுக்கு உங்கள் வோட்டா? யோசித்து வாக்களியுங்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை