உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவரை தள்ளி கொன்ற மனைவி 

கணவரை தள்ளி கொன்ற மனைவி 

ஒயிட்பீல்டு: குடும்பத் தகராறில் கணவரை தரையில் தள்ளிக் கொன்ற, மனைவி கைது செய்யப்பட்டார்.பெங்களூரு ஒயிட்பீல்டு பெல்லந்துார் ரோட்டில் வசித்தவர் மகேஷ், 39. கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேஜஸ்வினி, 35. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சில தினங்களாக கணவன், மனைவி இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், தேஜஸ்வினியை, மகேஷ் அடித்துள்ளார். கோபம் அடைந்த மனைவி, கணவரை பிடித்து பலமாக தள்ளினார். நிலைதடுமாறிய கணவர், தரையில் பலமாக விழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.அதிர்ச்சி அடைந்த மனைவி, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அக்கம்பக்கத்தினரிடம் கணவரை தெரியாமல் கொன்றுவிட்டதாக கூறி கதறினார். அங்கு வந்த ஒயிட்பீல்டு போலீசார், தேஜஸ்வினியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை