| ADDED : மே 28, 2024 01:20 AM
பெங்களூரு, கர்நாடக மாநிலம், பெங்களூரின் சதாசிவநகரில் வசிக்கும் மமதா, 55, என்பவர், சமீபத்தில் சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'என் 17 வயது மகளை, பலர் பாலியல் பலாத்காரம் செய்தனர். 'இது தொடர்பாக, போலீஸ் விசாரணைக்கு உதவி கேட்க, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அவரும் என் மகளை பலாத்காரம் செய்தார்' என குற்றம் சாட்டி இருந்தார்.இந்த குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்தார். தன் கவுரவத்தை குலைக்கும் நோக்கில், பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறார் என்றார். இந்த வழக்கை மாநில அரசு, சி.ஐ.டி.,க்கு மாற்றியது. சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதுபோல பலமுறை முக்கிய புள்ளிகள் மீது புகார் அளித்ததும் தெரியவந்தது.இதற்கிடையில் புகார்தாரர் மமதா, சில ஆண்டுகளாக சுவாசப்பை புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். மூச்சு திணறல் ஏற்பட்டதால், சில நாட்களுக்கு முன், பன்னரகட்டா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை அவர் உயிரிழந்தார்.