| ADDED : ஜூன் 02, 2024 01:39 AM
சிறந்த கவிஞரான திருவள்ளுவர் சிலை பாதத்தின் கீழ் நிற்பது மிகச் சிறந்த அனுபவம். இலக்கியம் மற்றும் தத்துவத்தின் முகடாக திருவள்ளுவர் திகழ்கிறார். வாழ்க்கை, சமூகம், கடமை மற்றும் அறம் ஆகியவை குறித்த திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்கள், உலக மக்களின் இதயங்களை வென்றுள்ளது. சர்வதேச மற்றும் நம் நாட்டு மேடைகளில், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி இருக்கிறேன்; பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் வாய்ப்பைப் பெற்றேன்.வளர்ச்சி அடைந்த நாடாக நம் இந்தியாவை கட்டமைப்பதற்கான இலக்கை நோக்கிய நம் பயணத்திற்கு, திருவள்ளுவரின் அறிவுரைகள் பேருதவியாக இருக்கும். இன்று, சர்வதேச பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தருவதற்கான நாடாக நம் இந்தியாவை மற்ற நாடுகள் எதிர்பார்க்கும் நிலை உருவாகி உள்ளது.அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை நோக்கிய உலக அளவிலான இயக்கத்தைக் கையாள முயலும்போது, திருவள்ளுவரின் காலம் கடந்த, என்றும் நிலைக்கும் அறிவுரைகள் மிக முக்கிய பங்காற்றும்.- நரேந்திர மோடி, பிரதமர்