உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலம் கைகொடுக்கவில்லை: விரக்தியில் வினேஷ் போகத் மவுனம் கலைத்தார்

காலம் கைகொடுக்கவில்லை: விரக்தியில் வினேஷ் போகத் மவுனம் கலைத்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காலம் எனக்கு கை கொடுக்கவில்லை என் விதியும் தான் என ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் எதி்ர்பார்த்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விரக்தியுடன் தெரிவித்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டியில் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, பைனலுக்கு முன்னேறியும், எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வெள்ளி பதக்கம் கோரி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் இவரது முறையீடு மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு இறுதியில் தள்ளுபடி ஆனது. இதனால் விரக்தி அடைந்தார்.இது குறித்து ‛எக்ஸ்' தளத்தில் கூறியது, இந்த ஒலிம்பிக்கில் நம் தேசிய கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் அதனுடன் என்னுடைய புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது.சொல்ல இன்னும் வார்த்தைகள் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல இப்போது போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி கடிகாரம் நின்றுவிட்டது,காலம் கைகொடுக்கவில்லை. என்னுடைய விதியும்தான். எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும். தொடர்ந்து எப்போதும் போராடுவேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பிரேம்ஜி
ஆக 17, 2024 10:54

அழுகுணி ஆட்டத்தை நிறுத்துங்கள் முதலில். மீடியாவும் இவருக்கு ஒத்து ஊதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா என்றாலே எல்லாவற்றிலும் கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள் என்ற எண்ணத்தை வலுப்படுத்தாதீர்கள்.


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2024 10:13

உங்களுக்குள் இருக்கும் பொய்யயையும் ஈகோவையும் தூக்கி எறியுங்கள்


nv
ஆக 17, 2024 09:30

கர்மா என்று ஒன்று உள்ளது..சிலருக்கு இந்த ஜென்மத்திலேயே நடக்கிறது..


Kasimani Baskaran
ஆக 17, 2024 08:20

வின்சியின் தூண்டுதலில் மல்லர்கள் இந்திய அரசுடன் மல்லுக்கட்டி விட்டு போட்டியில் மல்லுக்கட்ட மறந்து எடை கட்டுப்பாடு கூட இல்லாமல் கடைசி நேரத்தில் ஜெயித்து விட முடியும் என்று கனவு கண்டு அதிலும் தோல்வி என்பதுதான் சோகம்.


bgm
ஆக 17, 2024 07:48

வெற்றிக்கு விரக்தி வழி இல்லை. முதலில் விளையாட்டின் அடிபடையி விதிகளை அறிந்து முயற்சி செய்யவும். அரசியல் தவிர்த்து முனைப்புடன் செயல்பட்டால் வெற்று உமது


தேசியன்
ஆக 17, 2024 07:25

இறுதியில் வாய்மையே வெல்லும்..... புரிந்தால் நன்மையே.... ஜெய் பாரதம்


ramani
ஆக 17, 2024 05:46

உன் போராட்டம் என்றும் மோடிஜியை எதிர்த்து தான் இருக்கும். நீ மோடிஜி மீதிருந்த வெறுப்பாய் பக்கத்தை கங்கையில் தூக்கி போட்டாய். பதக்கமும் இனி உன்னிடம் வர பிரிய படவில்லை. கர்மா தன் வேலையை செய்கிறது. புலம்புவதில் உபயோகமில்லை


ramesh
ஆக 17, 2024 11:15

பாலியல் தொல்லை கொடுத்தவனை தான் எதிர்த்து போராடினார்கள் .அவர் மோடி உடைய கட்சியை சேர்ந்தவர் என்பதால் புனிதர் ஆகி விடுவாரா . கருத்து பதிவு செய்யும் பொது பெண்களுக்கு இளைக்க படும் பாலியல் கொடுமையையும் கருத்தில் கொள்ள வேண்டும் .நாமும் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் தான்


sampath
ஆக 17, 2024 05:14

உண்மைக்கும் நேர்மைக்கும் இப்போது மரியாதை இல்லாமலேயே போய்க்கொண்டு இருக்கிறது.. ஆனால் காலம் உங்களை ஒலிம்பிக் வரை இழுத்துச்சென்றுள்ளது இதனால் இப்போது உங்களை உலகறியும். இந்தளவிற்கு சோதனைகளை சந்தித்தபிறகும் என் போராட்ட குணம் மாறாது என்று சொன்னது உண்மையானவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் ஊக்கமாகவே பார்க்கப்படும்.....


RAJ
ஆக 17, 2024 03:19

இந்தியா உங்களுக்கு.. வேறு என்ன வேண்டும் சகோதரி ??


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை