ஆன்மிகம் ஆராதனை மஹோற்சவம்ஸ்ரீவித்யா நல அறக்கட்டளை சார்பில், சாதுராம் சுவாமிகளின் 24ம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம். நேரம்: காலை 7:00 மணி முதல் விக்னேஸ்வரா பூஜை, மஹன்யஸ்பூர்வகா ருத்ராபிஷேகம், கிராமார்ச்சனை, தீபாராதனை; 9:30 மணி முதல், பகல் 1:30 மணி வரை: அய்யப்ப சஹஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை, அனந்தநாராயணன் தலைமையிலான பிரதோஷம் பூஜை குழுவினரின் சாஸ்தா பிரீத்தி, சாஸ்தா வரவு பாட்டு; பகல் 1:30 மணி: தீபாராதனை, பிரசாத வினியோகம்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: ஆஞ்சநேயா உற்சவம், ஹலசூரு ராமகிருஷ்ணா பஜனை அறக்கட்டளை குழு சார்பில் பஜனை; 8:00 மணி: தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் ஷரவக் சங்க மண்டபம், ஸ்ரீ சோமேஸ்வரசுவாமி கோவில் தெரு, ஹலசூரு. தேவாரம் முற்றோதுதல்பெங்களூரு ஆண்ட அரசு உழவாரத் திருப்பணிக்குழு, மரகத் கூத்தன் அறக்கட்டளை, தமிழ் இலக்கிய பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து, சுந்தரர் தேவாரம் முற்றோதுதல். நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: மவுனகுரு மடம், தொட்ட குண்டா, பெங்களூரு. 41ம் ஆண்டு விழா41ம் ஆண்டு விழா, 34ம் ஆண்டு இலவச திருமண விழா, பச்சை பூக்கரகம், தேரோட்டம் விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 9:00 மணி: முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு கூழ் வார்த்தல். இடம்: ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீடம் கோவில், ஜீவன்பீமாநகர் கோவில் அருகில், பெங்களூரு.ஆடித்திருவிழா ஆடித்திருவிழாவை ஒட்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 10:00 மணி: தேர் ஊர்வலம், மோகன் சுவாமிகளின் பேரன் கிஷன் தீச்சட்டி, வேப்பிலை கரகம் சுமந்து ஊர்வலம் வருதல்; நண்பகல் 12:00 மணி: அன்னதானம். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம், எண்: 1, தர்மராஜா கோவில் வீதி, சுபாஷ்சந்திரபோஸ் சதுக்கம், சிவாஜிநகர், பெங்களூரு. நேரம்: பகல் 1:00 மணி: கும்ப பூஜை, கூழ் வார்த்தல்; இரவு 7:00 மணி: கும்ப பூஜை, காப்பு அவிழ்த்தல்; 8:00 மணி: தீபாராதனை. இடம்: தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர். நேரம்: அதிகாலை 5:00 மணி: அபிஷேகம்; 10:00 மணி: சிறப்பு தங்க கவச அலங்காரம், தீபாராதனை; இரவு 11:00 மணி: பச்சை கரகத்துடன் தேர் திருவிழா, டாக்டர் டி.வி.தியாகராஜ குழுவினரின் நாதஸ்வரம் இன்னிசை தேர் திருவிழா திருவீதி உலா வருதல். இடம்: அருள்மிகு ஸ்ரீ வெள்ளேரி அம்மன் திருக்கோவில், வண்ணாரப்பேட்டை, விவேக்நகர். நேரம்: காலை முதல்: கூழ் வார்த்தல், கும்பம் கலச ஊர்வலம். இடம்: படவேட்டம்மன் கோவில், சிக் பஜார் சாலை, சிவாஜிநகர். 47வது ஆடி திருவிழாநேரம்: காலையில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள். இடம்: ஸ்ரீமங்கள கருமாரியம்மன் கோவில் டிரஸ்ட். இடம்: மஹாலட்சுமி லே - அவுட். பிரம்ம ரத உற்சவம்பிரம்ம ரத உற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை: 7:00 மணி நாகம்மா தேவி பிரம்ம ரத உற்சவம். இடம்: ஸ்ரீநாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் ரோடு, சிவன்ஷெட்டி கார்டன். 39வது ஆடிப்பூர திருவிழா39ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: நண்பகல் 12:00 மணி: கூழ் வார்த்தல்; பகல் 1:00 மணி: அன்னதானம்; மாலை 4:00 மணி: தீ சட்டிகள், வேப்பிலை கரகங்கள், பால் குடங்கள், பூ கரகங்களுடன், ஓம் சக்தி, பிரத்யங்கிரா தேவியின் தேர் ஊர்வலம்; இரவு 9:00 மணி: தீபாராதனை, அன்னதானம். இடம்: ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை, சிவாஜிநகர். பொன்விழா கரக திருவிழாபொன்விழா ஆடி கரக திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 5:00 மணி: சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை; 10:00 மணி: சக்தி கரகம் முக்கிய வீதிகளில் உலா வருதல்; நண்பகல் 12:00 மணி: கூழ் வார்த்தல், தீபாராதனை; மதியம் 2:00 மணி: புஷ்ப கரகம் முக்கிய வீதிகளில் உலா வந்து, இரவு 8:00 மணி: காசி ஈஸ்வரர் கோவில் முன்பு, தீமிதி திருவிழா. இடம்: ஓம் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோவில் டிரஸ்ட், 10வது முக்கிய வீதி, கே.பி.அக்ரஹாரா. 74வது ஆடி கரகம்74 வது ஆடி கரக திருவிழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 8:00 மணி: சக்தி சாம்பவி பீடம் சார்பில், 3வது தின கங்கா பூஜை; அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, தீர்த்த பிரசாத வினியோகம்; நண்பகல் 12:30 மணி: கூழ் வார்த்தல்; அன்னதானம்; மாலை 6:30 மணி: சக்தி கரக ஊர்வலம்; இரவு 10:00 மணி: கங்கனம் விசர்ஜனை, கொடி இறக்கம், சுத்த பலி பூஜை, தீபாராதனை, தீர்த்த பிரசாத வினியோகம். இடம்:ஸ்ரீரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில் டிரஸ்ட், வீரபிள்ளை தெரு, சிவாஜிநகர். பெருவிழாதுாய வெற்றி அன்னை தேவாலயம் பெருவிழாநேரம்: காலை 6:30 மணி: ஆங்கிலத்தில் திருப்பலி; 7:30 மணி, 9:00 மணி: தமிழில் திருப்பலி; 10:30 மணி முதல், 11:00 மணி வரை: ஞான உபதேசம்; மாலை 5:30 மணி: ஜெபமாலை பவனி, தமிழில் திருப்பலி. இடம்: துாய வெற்றி அன்னை தேவாலயம், சாம்பியன் ரயில் நிலையம் பின்புறம், தங்கவயல். மலர் கண்காட்சிசுதந்திர தினத்தை ஒட்டி, கர்நாடக தோட்டக்கலை துறை சார்பில், 216வது மலர் கண்காட்சி நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு. யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களிமண் பயிற்சி12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.ஓவிய பயிற்சி ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.இசை ஹார்டு ராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 25 - 26, தரை தளம், பட்டந்துார், பெங்களூரு. ஆர்.ஆர். புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜூக் பாக்ஸ் இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: புளோ சர்ச் தெரு, 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு. காமெடிகாமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. கபே முஸ்ரிஸ் வழங்கும் ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர். கிரவுண்டெட் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. விச்சஸ் ஆப் காமெடி வழங்கும் ஜோக்ஸ் ஓவர் காபி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: டிரு பிரியு கபே, 3,163, பரமஹம்சா யோகானந்தா சாலை, 12வது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர்.