உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிணற்றில் மூச்சு திணறி இரு தொழிலாளர்கள் பலி

கிணற்றில் மூச்சு திணறி இரு தொழிலாளர்கள் பலி

மங்களூரு : கிணற்றுக்குள் சிமென்ட் வளையம் பொருத்தும்போது மூச்சுத் திணறி, இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.தட்சிண கன்னடாவின், கேப்பு கிராமத்தில், படிபாகிலு என்ற இடத்தில் தனியார் நிலத்தில், புதிதாக கிணறு தோண்டப்பட்டுள்ளது. இதற்கு சிமென்ட் வளையம் பொருத்தும் பணி நேற்று மதியம் நடந்தது.தொழிலாளர்கள் அலி, 24, இப்ராகிம், 40, ஆகியோர் 30 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் இறங்கி வேலை செய்தனர். அப்போது ஆக்சிஜன் கிடைக்காமல், மூச்சுத் திணறி இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இரண்டு பேரின் சடலங்களை வெளியே எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை