| ADDED : ஜூன் 15, 2024 01:42 AM
பவானா:முனாக் கால்வாயில் தண்ணீர் திருடிய இரண்டு டேங்கர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.டில்லியில் தண்ணீர் பிரச்னை மோசமடைந்ததால், டேங்கர் மாபியாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ., புகார் அளித்தது. இதேபோல் கால்வாய் பகுதியில் ரோந்து செல்லும்படி, போலீசாரை துணைநிலை கவர்னர் கேட்டுக் கொண்டார்.இதைத் தொடர்ந்து முனாக் கால்வாய் பகுதியில் போலீசார் ரோந்து பணியை துவக்கினர். இந்த பணியை துவக்கி ஒரு நாள் கடந்த நிலையில், கால்வாயில் இருந்து தண்ணீரை திருடியதற்காக இரண்டு தண்ணீர் டேங்கர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.விவசாய வயலுக்கு அருகில் உள்ள கச்சி சடார் என்ற இடத்தில் ஒரு டேங்கர் லாரியும், டி-பிளாக், டி.எஸ்.ஐ.ஐ.டி.சி., அருகே மற்றொரு டேங்கர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.முனாக் கால்வாய் ரோந்து பணியில் 56 போலீசார் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுவதாக உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.