உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., ரயில் விபத்து: பலி அதிகரிப்பு

உ.பி., ரயில் விபத்து: பலி அதிகரிப்பு

கோண்டா: யூனியன் பிரதேசமான சண்டிகரில் இருந்து வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகருக்கு சென்ற, எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் உத்தர பிரதேசத்தின் கோண்டா அருகே, தடம் புரண்டது. இதில் 35 பயணியர் காயம் அடைந்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.இந்த நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கோண்டா கலெக்டர் நேஹா சர்மா கூறினார்.அவர் கூறியதாவது: ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத மேலும் இரு பயணியர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை நான்கு ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த ஆறு பயணியரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தடம் புரண்ட ரயிலில் பயணித்த 600 பயணியர், சிறப்பு ரயிலில் அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை