மேலும் செய்திகள்
2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு
1 hour(s) ago | 3
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
2 hour(s) ago | 4
புதுடில்லி: 'மத சுதந்திரம் குறித்த அமெரிக்காவின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது என்பதால், அதை நிராகரிக்கிறோம்' என, வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆண்டறிக்கையை சமீபத்தில் அமெரிக்கா வெளியிட்டது. வெறுப்பு பேச்சு
அதில், 'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு அதிகரித்துள்ளது. இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. 'சில மாநிலங்களில் திருமணத்துக்காக வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டங்களும் இயற்றப்படுகின்றன' என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்காவின் ஆண்டறிக்கையை நாங்கள் கவனித்தோம். கடந்த காலத்தைப் போலவே இந்த முறையும் ஒருதலைப்பட்சமாகவே இந்த அறிக்கை உள்ளது. நம் நாட்டின் சமூக கட்டமைப்பு குறித்து புரிதல் எதுவும் இன்றி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நேர்மைக்கு சவால்
தேவையற்ற குற்றச்சாட்டுகள், தவறான விளக்கங்களின் கலவையாக இந்த அறிக்கை உருவாகியுள்ளது.அமெரிக்காவின் இந்த அறிக்கை நம் நாட்டு நீதிமன்றங்கள் வழங்கிய சில சட்டத் தீர்ப்புகளின் நேர்மைக்கு சவால் விடும் வகையில் உள்ளது. இந்தி யாவிற்குள் வரும் நிதி, தவறாக பயன்படுத்துவதை கண்காணிக்கும் விதிமுறைகளையும் இந்த அறிக்கை குறி வைத்துஉள்ளது. எனவே, அமெரிக்காவின் அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்.அமெரிக்காவில் இந்தியர்கள், குறிப்பாக சிறுபான்மையினர் மீதும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது குறித்தும் அந்நாட்டிடம் பலமுறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 3
2 hour(s) ago | 4