| ADDED : ஏப் 17, 2024 04:47 AM
தங்கவயல், : கோலார் லோக்சபா தொகுதியில் வீட்டில் இருந்த படியே முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப் பதிவு செய்தனர்.கோலார் மாவட்டத்தில் 85 வயதை கடந்தவர்கள், 13,815 பேர் உள்ளனர். இவர்களில் 1,433 பேர் வீட்டில் இருந்தே ஓட்டுப்பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,316 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். இது, 91.84 சதவீதம்.இம்மாவட்டத்தில் 20,413 மாற்று திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 759 பேர் வீட்டில் இருந்தவாறே ஓட்டளிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 704 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். இது 92.75 சதவீதம்.இத்தகவலை கோலார் மாவட்ட தேர்தல் அதிகாரி அக்ரம் பாஷா தெரிவித்துள்ளார்.