உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவாகரத்து வழக்கில் காத்திருப்பு காலம் அவசியமில்லை: கோர்ட்

விவாகரத்து வழக்கில் காத்திருப்பு காலம் அவசியமில்லை: கோர்ட்

மும்பை, விவாகரத்து வழக்கு களில், ஆறு மாதம் காத்திருப்பு காலம் பின்பற்றுவதை, வழக்கின் தன்மைக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும் என, மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த தம்பதிக்கு, 2021ல் திருமணம் நடந்தது. சிறிது நாட்களிலேயே இவர்கள் பிரிந்து, தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர். விவகாரத்து வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என, நீதிமன்றம் கூறியது.இதை எதிர்த்து, அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிபதி கவுரி காட்சே தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:விவாகரத்து வழக்குகளில், ஒரு தரப்புக்கு அநீதி கிடைத்து விடக்கூடாது மற்றும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு ஏற்படலாம் என்ற நோக்கத்தில், ஆறு மாதம் காத்திருப்பு முறை உள்ளது.ஆனால், தற்போது சமூக சூழ்நிலைகள் மாறி வருகின்றன. மக்கள் வாழ்க்கை முறை மிகவும் வேகமாக உள்ளது. காலத்துக்கு ஏற்ப, சட்ட நடைமுறைகளிலும் மாற்றங்கள் தேவை. விவாகரத்து வழக்குகளில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு மற்றும் பரஸ்பரம் புகார்கள் இருக்கலாம். அதுபோன்ற நேரத்தில், அவர்களது மனதை அமைதிப்படுத்தும் நோக்கத்துடன், ஆறு மாதம் காத்திருப்பை பயன்படுத்தலாம்.அதே நேரத்தில் இவர்கள், பரஸ்பரம் சம்மதத்துடன் விவாகரத்து கோரியுள்ளனர். நன்கு ஆலோசித்து, ஆராய்ந்தே இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். அதனால், காத்திருப்பு காலத்தை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளில், சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஆக 07, 2024 12:21

அரபு மன்னர் ஒருவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உண்டு. அனுபவி ராஜா அனுபவி.


அப்பாவி
ஆக 07, 2024 08:02

காலை லாஸ் வேகாசில் கல்யாணம் பண்ணி மாலை ரீனோ வில் விவாகரத்து வாங்கிப்பாங்களாம். இங்கேயும் மும்பையில் தாலி கட்டி, பூனேவில் பிரிச்சு உட்டுருங்க.


subramanian
ஆக 07, 2024 07:34

திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பது மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று ஆகிவிட்டது. எங்கும் எதிலும் யாரிடமும் ஒத்துப்போகவேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. உலகத்தோடு நாமும் பயணிக்க வேண்டும். ஆணோ, பெண்ணையோ தனியாக வாழ முடியுமா? எல்லோரும் சிந்தித்து பொறுமையாக முடிவெடுக்க வேண்டும்


Kasimani Baskaran
ஆக 07, 2024 05:39

நல்ல வேளை வேகமாக மாறிவருவதால் வாட்சாப்பில் விவாகரத்து ஓக்கே என்று சொல்லவில்லை.


தாமரை மலர்கிறது
ஆக 07, 2024 01:24

விவாகரத்தை ரெண்டே நாளில் அறிவித்து விடுங்கள். ரொம்ப நன்றாக இருக்கும். காலபோக்கில் திருமணம் என்ற பந்தமே தேவை இல்லை என்ற குறுகிய நோக்கில் இன்றைய பெண்கள் செயல்பட்டு வருகிறார்கள். இது பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதற்கு ஏற்றவாறு கோர்ட்டும் தாளம் போடுகிறது. திருமணம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இனிமேல் குழந்தைகளுக்கு பள்ளிகளில் போதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் என்ற பந்தம் இல்லையெனில், ஒருவருக்கு ஒருத்தி என்ற நிலை இல்லாமல், குழந்தைகளின் வாழ்வு கேள்விக்குறியாகும். நல்ல குடும்பமே, நல்ல சமுதாயம் ஆகும். ஆணும் பெண்ணும் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். இன்றைய பெண்கள் விட்டுக்கொடுப்பதே தவறு என்பதைபோன்று செயல்படுகிறார்கள். ஆண்கள் மிகவும் இறங்கிவந்து வாழ்க்கையை நடத்தினால் போதும் என்ற ரீதியில் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால், ஆண்கள் பழையகாலத்தை போன்று பெண்களுக்கு குழந்தை தருவதற்கும், பாதுகாப்பளிப்பது மட்டுமே ஆணின் கடமை என்று கருதிவிடுவார்கள். பெண்களுக்கு மனைவி என்ற பதவியை கொடுத்து, அவளுக்காக வீடு, உணவு, உடை, அலங்காரப்பொருள்கள், ஜெவெல்லரி போன்றவை கொடுப்பது தனக்கு அவசியம் இல்லை என்று பண்டையகாலத்தை போன்று அல்லது இப்போதைய மேலை நாடுகளைபோன்று கருத தொடங்கி விடுவான். மேலை நாடுகளில் ஆண்களை அவதூறாக பேசி தொடப்பக்கட்டையாக மாற்றியதன் விளைவை அங்குள்ள பெண்கள் உணர்ந்து வருந்துகிறார்கள். ஏனனில் அங்குள்ள ஆண்கள் திருமணம் செய்யாமல் காலத்தை தள்ளிபோட்டு வருகிறார்கள்.


Balakumar V
ஆக 07, 2024 00:14

தவறான வழிகாட்டல் எனத் தோன்றுகிறது


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி