உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீர் மறுசுழற்சி தொடர் சரிவு பற்றாக்குறை பாதிப்பு தீவிரமாகிறது

தண்ணீர் மறுசுழற்சி தொடர் சரிவு பற்றாக்குறை பாதிப்பு தீவிரமாகிறது

ரோஸ் அவென்யூ:யமுனை ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால், தலைநகரில் நீர் மறுசுழற்சி மூலம் கிடைக்கும் உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருவதாக, மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி தெரிவித்தார்.யமுனை நதியில், டில்லியின் பங்கு தண்ணீரை ஹரியானா அரசு விடுவிக்கவில்லை என, ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது.இந்நிலையில் தண்ணீர் மறுசுழற்சி குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி, தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:யமுனைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால், டில்லியில் நீர் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. சாதாரண சூழ்நிலையில், 3.80 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அது தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது.உற்பத்தி குறைந்துள்ளதால், டில்லியின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஜூன் 6ம் தேதி ஒரு நாளைக்கு 3.79 லட்சம் கோடி லிட்டராக இருந்த நீர் உற்பத்தி, மறுநாள் 3.75 லட்சம் கோடி லிட்டராக குறைந்தது. ஜூன் 8ம் தேதி 3.74 லட்சம் கோடி லிட்டராக உற்பத்தி ஆனது.ஜூன் 9ம் தேதி 3.70 லட்சம் கோடி லிட்டராகவும், மறுநாள் 3.62 லட்சம் கோடி லிட்டர், ஜூன் 11ல் 3.47 லட்சம் கோடி லிட்டர், ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் முறையே 3.59, 3.55 லட்சம் கோடி லிட்டராக இருந்தது.நகரில் ஒரு நாளைக்கு 19 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீரை வீணாக்க வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி