உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆற்றில் மிதந்த உடல்கள்

ஆற்றில் மிதந்த உடல்கள்

ஆற்றில் மிதந்த உடல்கள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த, 3 வயது குழந்தை உட்பட, 26 பேரின் உடல்கள், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியாறு ஆற்றின் இருட்டுக்குத்தி, பொதுகல்லு, பனங்காயம், பூதானம் உள்ளிட்ட பகுதிகளில் மிதந்த நிலையில், நேற்று கண்டெடுக்கப்பட்டன. கை, கால்கள் மற்றும் தலைகள் கூட இல்லாத நிலையில், சில உடல்கள் ஆற்றின் கரையில் கரை ஒதுங்கின.

100 தொழிலாளர்கள் மாயம்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியில் உள்ள தேயிலை, காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட, நுாற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.ஹாரிசன்ஸ் மலையாள பிளாண்டேஷன் நிறுவன பொது மேலாளர் பெனில் ஜான் கூறுகையில், ''முண்டக்கை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில், எங்கள் நிறுவனம் சார்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 600 பேர் பணிபுரிந்து வந்தனர்.''மொபைல் போன் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டு விட்டதால், ஏராளமான தொழிலாளர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதுவரை, எங்கள் நிறுவனத்தின் ஐந்து ஊழியர்களின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 35 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் காணவில்லை,'' என்றார்.

மோசமான வானிலை

கல்பெட்டா எம்.எல்.ஏ., டி.சித்திக் கூறுகையில், ''முண்டக்கை பகுதியில் ஏராளமானோர் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களது நிலைமை மோசமாக இருக்கிறது. அவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாலை 5:00 மணிக்கு பின், முண்டக்கை பகுதி இருட்டாகி விடும். அதற்குள் முடிந்த மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.மோசமான வானிலை காரணமாக, நம் விமானப்படையின் ஹெலிகாப்டரால், முண்டக்கை பகுதிக்கு செல்ல முடியவில்லை என, தகவல்கள் தெரிவிக்கின்றன.----------

மீட்பு பணியை

ஒருங்கிணைக்க5 அமைச்சர்கள்வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணியை ஒருங்கிணைக்க, கேரள அமைச்சர்கள் ஏ.கே.சசீந்திரன், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் உட்பட ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வயநாட்டில் தங்கியிருந்து மீட்புப் பணிகளை கண்காணிக்க உள்ளனர்.மேலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின், குன்னுாரின் வெலிங்டனில் உள்ள ராணுவ தலைமையகத்திலிருந்து ராணுவக் குழுவினரும் வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, தீயணைப்புப் படை, காவல் துறை, வனம் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள், நிலப்பரப்பை நன்கு அறிந்த ஏராளமான உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் இணைந்துள்ளனர்.

பள்ளியில் தங்கியிருந்தோர் நிலை?

வயநாட்டில் கனமழையைத் தொடர்ந்து, வெள்ளர்மல்லில் செயல்படும் அரசு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளி நிவாரண முகாமாக செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று முன்தினம் பல குடும்பங்கள் தங்கி இருந்தன. நேற்று அதிகாலை கனமழை தீவிரமடைந்ததை அடுத்து, சிலர் பள்ளியில் இருந்து வெளியேறினர். எனினும், சிலர் பள்ளியிலேயே தங்கினர். தற்போது நிலச்சரிவால் இந்த பள்ளி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றி சேறும், சகதியுமாக உள்ளது. இதில் தங்கியிருந்தோரின் நிலை குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்குமுன் நிகழ்ந்த நிலச்சரிவுகள்.

தேதி இடம் பலி 1948 செப்., 18 குவஹாத்தி, அசாம் 5001968 அக்., 2 டார்ஜிலிங், மேற்கு வங்கம் 1,0001998 ஆக., 18 மாப்லா, உத்தரகண்ட் 3802001 நவ., 9 ஆம்பூரி, கேரளா 402013 ஜூன் 16 கேதர்நாத், உத்தரகண்ட் 5,7002014 ஜூலை 30 மாலின், மஹாராஷ்டிரா 1512020 ஆக., 6 இடுக்கி, கேரளா 702024 ஜூலை 30 வயநாடு, கேரளா 107

நிலச்சரிவுக்கு என்ன காரணம்?

நிலச்சரிவு ஏற்படுவதற்கு மூன்று முதன்மையான காரணங்களை நிபுணர்கள் வரிசைப்படுத்துகின்றனர். 1. புவியியல், 2. உருவவியல், 3. மனித செயல்பாடு.* புவியியல் என்பது நிலத்தின் தன்மையுடன் தொடர்புடையது. பூமி அல்லது பாறை பலவீனமாக இருக்கலாம். அதில் விரிசல்கள் இருக்கலாம். நிலத்தின் வெவ்வேறு அடுக்குகள் வெவ்வேறு வலிமை மற்றும் உறுதித்தன்மை கொண்டிருக்கலாம்.* உருவவியல் என்பது நிலத்தின் அமைப்பை குறிக்கிறது. உதாரணமாக, காட்டுத் தீ அல்லது வறட்சியினால் தாவரங்களை இழக்கும் மலைச்சரிவுகளில் மிக எளிதாக நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும், தாவரங்கள் மண்ணை உறுதியுடன் தக்கவைத்துக் கொள்கின்றன. மேலும் மரங்கள், புதர்கள் மற்றும் பிற தாவரங்களின் வேர் அமைப்புகள் இல்லாமல், நிலம் உறுதித்தன்மையை இழந்து, எளிதில் சரிய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.* அதோடு, விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்ற மனித செயல்பாடுகள், நிலச்சரிவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. நீர்ப்பாசனம், வனங்கள் அழிப்பு, அகழ்வாராய்ச்சி மற்றும் நீர்க்கசிவு உள்ளிட்டவை சரிவான பகுதிகளை சீர்குலைக்கவும், பலவீனப்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மழைக்காலங்களில் அதிக நிலச்சரிவுகள்அசாமின் குவஹாத்தியை சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் பார்த்தா ஜோதி தாஸ் கூறியதாவது:மலைகளின் பலகீனமான நிலப்பரப்பில் தேவையற்ற, நடைமுறைக்கு மாறான அல்லது திட்டமிடப்படாத கட்டுமானங்கள் குறுக்கிடும் போது, நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. அரசு மற்றும் தனியார் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக காடுகளை அழிப்பதால், மண் வலுவிழக்கிறது. உயரத்தில் இருந்து வரும் மழைநீர் மண் சரிவை ஏற்படுத்துகிறது. ரயில் பாதை விரிவாக்கம், சாலை மற்றும் பாலங்கள் அமைப்பது போன்ற பணிகளால், மலைப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சீர்குலைகின்றன.பொதுவாக, 50 முதல் 60 சதவீத மழைநீரை பூமி உள்வாங்கிக் கொள்கிறது. நிலப்பரப்பின் சீரழிவு காரணமாக, பூமிக்கும் நீர் ஊடுருவுவது தடைபடுகிறது. தாவர வடிவங்களின் மாற்றத்தால் மண் தாங்கும் திறனை இழக்கிறது. இதனால் நிலத்தில் நீர் தேங்கி, மண் தளர்ந்து, நிலச்சரிவு ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி