உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவால்களில் ஜெயித்தோம் ராகவேந்திரா பெருமிதம்

சவால்களில் ஜெயித்தோம் ராகவேந்திரா பெருமிதம்

உடுப்பி:''நாட்டின் வளர்ச்சிக்கும், மரியாதைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆற்றிய பங்களிப்பால், பல சவால்களுக்கு மத்தியில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்துள்ளது,'' என, ஷிவமொகா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா தெரிவித்தார்.உடுப்பி மாவட்டம், பைந்துார் பா.ஜ., மண்டல குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ராகவேந்திரா பேசியதாவது:இங்குள்ள 63 சதவீத மக்கள் எனக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். இதன் பின்னணியில், கட்சி தொண்டர்களின் நேர்மையான முயற்சி உள்ளது. தொகுதி வளர்ச்சிக்கு குந்தாபூர் - கங்கொல்லி இணைப்பு பாலம் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற, நேர்மையாக முயற்சி செய்து, மக்களின் கடனை அடைப்பேன்.மத்திய அரசில் அமைச்சராக இல்லாவிட்டாலும், இத்தொகுதியை மேம்படுத்தி முன்மாதிரியாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கும், மரியாதைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆற்றிய பங்களிப்பால், பல சவால்களுக்கு மத்தியில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை