உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும்: ராகுல் சாடல்

பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும்: ராகுல் சாடல்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, பைனான்சியல் டைம்ஸ் ஆங்கில இதழுக்கு ராகுல் அளித்த பேட்டி: மோடி தலைமையிலான அரசு எளிதாக உடையக்கூடியது. சிறிய இடையூறு ஏற்பட்டால் கூட அரசு கவிழ்ந்துவிடும். பிரதமர் மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ghg8r0hr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அடக்குமுறைகள் நிகழாமல் நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால், இண்டியா கூட்டணி எந்த சந்தேகமும் இன்றி பெரும்பான்மையை வென்றிருக்கும்.

ஆபத்து

அங்கு அதிருப்தியில் உள்ளவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். சிறிய குழப்பம் ஏற்பட்டால் கூட மத்தியில் உள்ள தே.ஜ., கூட்டணி அரசுக்கு ஆபத்து. வெறுப்பையும், கோபத்தையும் பரப்பி, அதன் மூலம் பலனைப் பெறலாம் என பா.ஜ., நினைத்தது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., பயன்படுத்திய மதம் மற்றும் வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். இவ்வாறு ராகுல் கூறினார்.

நீட் முறைகேடு

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பதில் கூறாமல் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடும். பார்லிமென்டிலும், மக்கள் மன்றத்திலும் வலுவாக குரல் எழுப்புவோம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Barakat Ali
ஜூன் 21, 2024 21:48

பரிதாபம் ........ இன்னும் அநேக வருடங்கள் நாவை தொங்க போட்டுக்கொண்டே ஏங்கணும் .........


Balamurugan
ஜூன் 21, 2024 11:02

useless fellow


Ramalingam Shanmugam
ஜூன் 21, 2024 11:01

பட்டாயா உங்களை அழைக்கிறது சென்று வென்று வாருங்கள்


Baranitharan
ஜூன் 21, 2024 10:15

What a fantastic foolish statement, the party that has 240 seat will struggle but this useless congress has only 99 and succeed for 5 years. is he dreaming or what? ask him to go and attend KG1 classes and also study mathematic that 240 is higher than 99. useless.


Venkata Gururajan
ஜூன் 19, 2024 15:54

இவர் ஒரு ப்ளாப் மேன்


Venkata Gururajan
ஜூன் 19, 2024 15:52

முதலில் சொந்தமா ஜெயிக்க பாருங்கள் அப்படியே அவர் அரசு கவிழ்ந்தாலும் உங்களை எத்தனை பேர் ஆதரிப்பர் அவர் எப்படிப்பட்டவரானாலும் தனது உழைப்பு மற்றும் திறமையால் 3வது முறையாக பிரதமர் ஆகி உள்ளார் உங்களுக்கு இவ்வளவு வசதியிருந்தும் ஏன் வரமுடியவில்லை


Tetra
ஜூன் 19, 2024 15:18

ஆஹா ஆசையை பார்த்தீர்களா? 99 ஓசி சீட் வைத்துக்கொண்டு ஆடும் இவரை என்ன சொல்வது?


Ramanujan
ஜூன் 19, 2024 12:59

3 கட்சிகள் கூட்டணி பலவீனமானதென்றால் 30 கட்சிகளுடன் காத்துக்கொண்டிருக்கிறியே நீ எப்படி பலமான அரசை கொடுப்பாய்? பிய்த்து பிராண்டி விட மாட்டார்களா ? கேட்பவனெல்லாம் மதி அற்றவர்கள் என்ற நினைப்போ ?


S.V.Srinivasan
ஜூன் 19, 2024 11:48

டெல்லில பாராளுமன்றத்துக்கு பக்கத்துல மரம் இருந்தா, 2 கிளியை வச்சுக்கிட்டு ஜோசியம் சொல்லு பப்பு. அதையாவது உருப்படியா செய்.


m v kuppuswamy
ஜூன் 19, 2024 07:41

நீட் தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடந்தால் இது வேண்டுமா வேண்டாமா என்பதை அணைத்து கட்சி கூட்டம் கூட்டி விவாதித்து ஒரு தீர்வு காண வேண்டும் இதை இன்னும் அரசியல் ஆக்க கூடாது


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ