| ADDED : ஜூன் 14, 2024 02:18 AM
ஹிமாச்சல பிரதேசம் யமுனை நதியில் திறந்து விட்டதாகக் கூறப்பட்ட உபரிநீர் டில்லிக்கு வரவே இல்லையே, அந்த தண்ணீர் எங்கே போனது என்ற குழப்பம் டில்லி மக்களுக்கு ஏற்பட்டது.ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து, டில்லி ஆம் ஆத்மி அரசு ஆடிய அதீத அரசியல் விளையாட்டு நேற்று உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது.ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. டில்லியில் அதன் தோழமை கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.யமுனை நதியில் வரும் தண்ணீரே, தேசிய தலைநகர் டில்லியின் அன்றாடத் தேவைக்கும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த ஆண்டு கோடையால் டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.யமுனையில் தண்ணீர் வருவதை ஹரியானா தடுத்து நிறுத்துவதாக மாநில ஆம் ஆத்மி அரசு குற்றஞ்சாட்டுகிறது. இந்த பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடந்த 7ம் தேதி முதல் 137 கன அடி தண்ணீரை டில்லிக்கு ஹிமாச்சல பிரதேசம் திறந்து விட்டதாகக் கூறப்பட்டது. இங்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. டில்லியில் அதன் தோழமை கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.யமுனையில் ஹிமாச்சல பிரதேசம் திறந்துவிட்ட தண்ணீர் டில்லிக்கு வரவில்லை. ஹிமாச்சல பிரதேசம் யமுனை நதியில் திறந்து விட்டதாகக் கூறப்பட்ட உபரிநீர் டில்லிக்கு வரவே இல்லையே, அந்த தண்ணீர் எங்கே போனது என்ற குழப்பம் டில்லி மக்களுக்கு ஏற்பட்டது.டில்லிக்கு வரும் வழியிலேயே டேங்கர் லாரி மாபியாக்கள் தண்ணீரை திருடிவிட்டதாக பா.ஜ., புகார் கூறியது. ஆம் ஆத்மி, யமுனை பாயும் வழியில் உள்ள ஹரியானா பா.ஜ., அரசு மீது பழிபோட்டது.பா.ஜ., மீது பழிபோடுவதற்காக, ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து, டில்லி ஆம் ஆத்மி அரசு ஆடிய அதீத அரசியல் நாடகம், நேற்று உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது.தண்ணீர் திறக்காமலேயே உச்ச நீதிமன்றத்தில் ஹிமாச்சல பிரதேச அரசு பொய்யான தகவல் தெரிவித்தது, வெளிச்சத்துக்கு வந்தது. இதற்காக அம்மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் சேர்ந்து நடத்திய நாடகத்தால் டில்லி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தண்ணீர் வருமா... வராதா... என்று தினமும் காத்திருக்கின்றனர். அன்றாடத் தேவைக்கே தண்ணீர் இல்லாத நிலையில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது டில்லி மக்களுக்கு சவாலாக உள்ளது.- நமது நிருபர் -