உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 கட்ட தேர்தல் ஏன்? சந்தோஷ் லாட் கேள்வி!

2 கட்ட தேர்தல் ஏன்? சந்தோஷ் லாட் கேள்வி!

ஷிவமொகா: “லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அடையும்,” என, அமைச்சர் சந்தோஷ் லாட் கூறினார்.தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட் ஷிவமொகா வில் அளித்த பேட்டி:மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் என்ன செய்தோம் என, பிரதமர் நரேந்திர மோடி எங்கும் பேசுவது இல்லை. பாகிஸ்தான், தலிபான்கள், முஸ்லிம்கள், ராமர் கோவில் ஆகியவை பற்றி மட்டும் பேசுகிறார்.ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறினார். ஆனால் அது பற்றி பேசுவது இல்லை. தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்கு ஒரேகட்டமாக தேர்தல் நடத்தி உள்ளனர். கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது ஏன்?பிரதமர் மோடி பிரசாரம் செய்வதற்காக, இரண்டு கட்ட தேர்தல் நடத்துகின்றனர். அப்படி என்றால் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, இங்கு தகுதியான தலைவர்கள் இல்லையா? மாநிலத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. 20 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். தேர்தலில் பா.ஜ., தோல்வி அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை