உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முத்தலாக் தடை சட்டம் ஏன்? மத்திய அரசு கோர்ட்டில் விளக்கம்

முத்தலாக் தடை சட்டம் ஏன்? மத்திய அரசு கோர்ட்டில் விளக்கம்

புதுடில்லி, திருமணம் என்ற சமூக கட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் பெண்களின் நிலைமையை மோசமாக்கும் வகையிலும் இருந்ததாலேயே, முத்தலாக் முறைக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.முஸ்லிம்களில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முத்தலாக் முறைக்கு தடை விதித்து, 2019ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன்படி, முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றால் தண்டனை விதிக்கப்படும்.முத்தலாக் முறை செல்லாது என, 2017ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி இருக்கையில், முத்தலாக் கூறி விவாகரத்து பெறுவதை எப்படி தண்டனைக்குரிய குற்றமாக்க முடியும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த சமஸ்த கேரள ஜாமியாத் உல் உலேமா என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:முத்தலாக் முறை செல்லாது என, 2017ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், இந்த முறையில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன்களை அணுகினர்.சட்டப்பூர்வ விதிகள் இல்லாததால் போலீசால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்தே, முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது.முத்தலாக் முறை என்பது முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமையை, சம உரிமை கிடைப்பதை மீறுவதாக உள்ளது.பார்லிமென்டின் சட்டம் இயற்றும் உரிமையில் தலையிட முடியாது என்று, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளது.முத்தலாக் என்பது முஸ்லிம் பெண்களின் நிலைமையை மோசமாக்குவதாக இருந்தது. திருமணம் என்ற சமூக கட்டமைப்புக்கு எதிராகவும் இருந்தது. இதையடுத்தே, முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. முத்தலாக் முறை, உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டாலும், அந்த முறையைப் பயன்படுத்தினால் தண்டனை வழங்க முடியாது. தண்டனை வழங்குவதன் வாயிலாகவே, குற்றத்தை தடுக்க முடியும். அதற்கான சட்டத்தை பார்லிமென்டே நிறைவேற்ற முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ