உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏன்?: பிரியங்கா கேள்வி

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏன்?: பிரியங்கா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது: உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை நினைவில் வையுங்கள். பா.ஜ., அமல்படுத்த நினைக்கும் சட்டங்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஹிமாச்சல பிரதேச விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்?. நாங்கள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம். இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்

அவமரியாதை

நரேந்திர மோடி பொதுமக்களை அவமரியாதை செய்துள்ளார். தேர்தல் மேடைகளில் பொதுப் பிரச்னைகளைப் பேசுவதில்லை. இன்று காங்கிரஸ் கட்சிதான் மக்கள் பிரச்னை பற்றி பேசுகிறது. மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தே ராகுல் சென்றார். பின்னர் மணிப்பூரில் இருந்து மஹாராஷ்டிரா வரை சென்றார். மக்களுக்காக அரசு இயங்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக இருந்து வருகிறது.

ரூ.16 லட்சம்

பிரதமர் மோடி மேடைகளில் நாடு முன்னேறுகிறது, பொருளாதாரம் வலுவடைகிறது என பேசுகிறார். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பது ஏன்?. நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏன்?. பணவீக்கம் ஏன் இவ்வளவு அதிகமாகிறது?. நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.

பணவீக்கம்

ஆனால், பொது மக்களுக்கான திட்டத்தை கொண்டு வரும்போது, ​​நாட்டில் பணம் இல்லை, பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்கிறார்கள். தேர்தலில் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் நாளில் ஓட்டளிக்க செல்லும் போது, ​​பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் நீங்கள் போராடும் உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை நினைவில் கொள்ளுங்கள். கடினமாக உழைத்தாலும், மக்களால் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஆரூர் ரங்
மே 27, 2024 11:23

வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநில ஆட்கள் தமிழகத்துக்கு திரும்ப வரவில்லை என செய்தி. ஆக வேலைக்கு ஆளில்லை என்பதே உண்மை.


R.Varadarajan
மே 27, 2024 07:21

நீங்கள்தான் எந்த ஒரு வேலையில்லாமல் அரசியலிலேயே வெட்டியாகப்பொழுதை கழிக்குரீங்க உங்களுக்கு உள்ள வசதிக்கு ஒரு தொழிற்சாலை துவங்கி பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கலாமே, வெறும் வாயால் வடை சுடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.


sankar
மே 26, 2024 21:58

உண்மை தான் சார் - இவர்கள் குடும்பத்தில் யாருக்குமே வேலை இல்லை - சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறாங்க


rsudarsan lic
மே 26, 2024 19:13

அம்மணிக்கு வயது? இது வரைக்கும் என்ன வேலைக்கு ட்ரை செய்தார் ?


P R ravi
மே 26, 2024 19:03

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் மிகவும் அதிகம் என்பதெல்லாம் பெரிது படுத்தப்பட்ட செய்திகளாகவே தோன்றுகிறது ராகுல் காந்தி குடும்பத்தில் வேலையின்மை இருக்கலாம் ஏனென்றால் எல்லோருமே அரசியலுக்கு வந்து விட்டீர்கள்


M Ramachandran
மே 26, 2024 19:01

தப்பி ஹரி இந்த திருடர்கள் கூட்டத்திடம் நாட்டைய ஒப்புக்அடையது விடாதீர்கள் 70 வருடமாகா மக்கள் பணத்தை சுரண்டி இன்பம் கண்ட கும்பல் மறுபடியும் தன சுய ரூபத்தை காட்டா கூறிய பற்களுடன் காத்து கொண்டிருக்கிறது. மக்களெ உஷார்


என்றும் இந்தியன்
மே 26, 2024 18:54

இதன் உண்மையான பொருள் "எனக்கு 52 என் தம்பி பப்புவுக்கு 51 வயது இருவருக்கும் 45 வருடமாக வேலையின்மை என்று படிக்கவும்"


GMM
மே 26, 2024 18:41

உங்கள் கட்சி குடும்ப உறுப்பினர் சஞ்சய் காந்தி வேலை வாய்ப்பு பெற கட்டாய குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தார். தமிழகம் பஸ் டிக்கெட்ல் நாம் இருவர், நமக்கு ஒருவர் என்று அச்சிட்டு பார்த்தது. நீங்கள் ஏன் தொடர்ந்து அமுல் படுத்தவில்லை.? உலகம் திறந்த சந்தை. உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு. ராகுல் , பிரியங்கா போன்ற எந்த தொழிலும் தெரியாதவருக்கு எங்கும் வேலை கிடைக்காது. பல நகர்களில் வேலைக்கு ஆள் தேவை விளம்பரம் காண முடியும். காங்கிரஸ் காலத்தில் எங்கும் காண முடிந்து இருக்காது.


Krishna
மே 26, 2024 18:24

இந்த பெண்மணி மற்றைய காந்திகளைவிட பொய் சொல்லுபவராஹ இருக்கிறார். சென்னையிலும், பெங்களூருலய்ம் இன்ஜினியரிங் கம்பனிகளில் வெளிநாட்டிலிருந்து வேலைக்கு அமர்த்துகிறாரகள். இப்போது எல்லோருக்கும் வேலை இருக்கு.


Lion Drsekar
மே 26, 2024 17:41

ஒரு குடும்பத்தில் பிறந்து விட்டால் எல்லா துறைகளிலும் மிக சிறந்த நிர்வாகி ஆவது இங்குமட்டுமெ காண முடியும். அ ஆ தெரியவேண்டாம் ஆங்கிலம் தெரியவேண்டாம் வேறு எந்த தகுதியும் வேண்டாம் ஒரு தேர்வை எழுதினால் இவர்கள் சார்பாக அந்த ஊரையே அவர்கள் கைகளில் ஒப்படைப்பார்கள் . இதற்குடத்தான் பொது அறிவு என்று பெயர் . மக்களின் வரிப்பணத்தில் ஆரம்பம் முதலே பல லட்சம் கோடி சம்பளம், ராஜ வாழ்வு , அதே துறைகளில் அனுபவம் பெற்ற சான்றோர்கள் அவர்களுக்கு விளையாட்டு நமக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை