உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகனுக்கு பதில் தந்தை; காஷ்மீர் தேர்தலில் களம் இறங்கினார் பரூக் அப்துல்லா

மகனுக்கு பதில் தந்தை; காஷ்மீர் தேர்தலில் களம் இறங்கினார் பரூக் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் நான் போட்டுயிடுகிறேன். மகன் உமர் அப்துல்லா போட்டியிடமாட்டார்' என தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெறும்.

மாநில அந்தஸ்து

இந்நிலையில், பரூக் அப்துல்லா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் நான் கட்சியை வழிநடத்த போகிறேன். தேர்தலில் நான் போட்டுயிடுகிறேன். நாங்கள் தனிப்பெரும்பான்மை பெறுவோம். மகன் உமர் அப்துல்லா போட்டியிடமாட்டார். அவர், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு எடுத்துள்ளார்.

வரவேற்கிறேன்!

மாநில அந்தஸ்து கிடைத்ததும் நான் பதவி விலகுவேன். ஒமர் அப்துல்லா அந்த தொகுதியில் போட்டியிடுவார். காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்கிறேன். எல்லைகளில் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று நான் உணர்கிறேன். ஆனால் பயங்கரவாதிகள் காஷ்மீரில் பதுங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Nandakumar Naidu.
ஆக 17, 2024 20:15

இந்த தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இவர் காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர். இவர் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் வளரும். தீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பார்.


ராமகிருஷ்ணன்
ஆக 17, 2024 11:38

ஊரை அடித்து உலையில் போடுரவன் தான் நீண்ட ஆயுளுடன் இருக்கிறான்கள். நல்ல மனுஷன் சீக்கிரமே போய் விடுகிறார்கள்


Barakat Ali
ஆக 17, 2024 10:45

ஏற்கனவே இஸ்லாத்தில் ஜனநாயகத்துக்கு இடம் கிடையாது என்கிற கெட்ட பெயர் இருக்கிறது .... அதற்குத் துணையாக அவுரங்கசீப் உதாரணமாக அமைந்துவிட்டார் .... இந்த லட்சணத்தில் இவர் வேற ....


ஆரூர் ரங்
ஆக 17, 2024 10:29

அப்பா மகன் தவிர கட்சியிலுள்ள மற்றவர்களுக்கு போஸ்டர், பசைவாளிகளுடன் திரிகிற வேலைதான்.


Shekar
ஆக 17, 2024 09:49

எங்க ஊர்லயும் இப்படித்தான், கடைசிவரை அப்பா மகனுக்கு பதவிய கொடுக்கல.


தமிழ்வேள்
ஆக 17, 2024 09:36

இந்த ஜூனியர் நேருவுக்கு தெரியாமல் எந்த பயங்கரவாதி காஷ்மீரில் நுழைய இயங்க முடியும்? நடிகன்பா..


RAJ
ஆக 17, 2024 09:12

இவரை பாக்கும்போது எல்லாம் மாமா நேரு டக்குனு மனசுல வந்து போவார். வயசான காலத்துல வேற ஒருவருக்கு சான்ஸ் குடிக்கலாம். மனசு வேணும்ல. ..


veeramani
ஆக 17, 2024 09:02

காஷ்மீர் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும் ..இன்னும் கொள்ளைக்கார குடும்பத்தினரின் கையில் அதிகாரத்தை கொடுக்கக்கூடாது . காஸ்மீரி மக்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை வாய்விட்டு பல வருடங்கள் சென்றுவிட்டது. அனைவரும் மக்கள் ஆட்சி என்ற அதிகார பரவலை ஏற்றுக்கொள்ளவேண்டும் அனைவரும் சிந்தித்து வாக்குகளை போடுங்கள்


VENKATASUBRAMANIAN
ஆக 17, 2024 08:21

மக்களை முட்டாளாக்குவதில் வல்லவர்கள்.. இவர் நினைத்தால் போட்டி போடுவார்கள் இல்லையென்றால் அப்பா பிள்ளை பேரன் என்று போட்ட போட வைப்பார்கள். யார் அப்பன் வீட்டு காசு . தேர்தல் செலவுகளை இவரது குடும்பத்திடம் வசூல் செய்ய வேண்டும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்


Kasimani Baskaran
ஆக 17, 2024 08:13

ஊழல் செய்ய முடியாமல் வீட்டில் அடைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் வாய்ப்பு கிடைத்தவுடன் பொது மக்களின் சொத்துக்களை களீபரம் செய்யாமல் இருந்தால் நல்லது.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ