உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., அரசு இருக்குமா? பிரணவானந்த சுவாமிகள் டவுட்

காங்., அரசு இருக்குமா? பிரணவானந்த சுவாமிகள் டவுட்

உத்தரகன்னடா: ''நாட்டின் மற்ற மாநிலங்களில் இல்லாத சிடி, பென் டிரைவ் அரசியல், கர்நாடகாவில் மட்டும் நடக்கிறது. இத்தகைய அரசியல், கர்நாடகாவுக்கு சாபம்,'' என, தேசிய ஈடிக மஹாமண்டல தலைவர் பிரணவானந்த சுவாமிகள் தெரிவித்தார்.உத்தரகன்னடா, கார்வாரில் நேற்று அவர் கூறியதாவது:தனிப்பட்ட விஷயத்தை, அரசியலுக்கு பயன்படுத்துவது எந்த கட்சிகளுக்கும், கவுரவத்தை தராது. வேண்டுமானால் சித்தாந்தம் அடிப்படையில், அரசியல் செய்யட்டும். பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், தேவையின்றி தேவகவுடா, குமாரசாமியின் பெயரை இழுத்து வருகின்றனர்.தனிப்பட்ட விஷயங்களை அரசியலுக்கு பயன்படுத்தினால், பிரஜ்வல் வழக்கில் ம.ஜ.த.,வுக்கு எந்த அளவில் பாதிப்பு ஏற்பட்டதோ, அதே அளவு பாதிப்பை வருங்காலத்தில், காங்கிரசும் அனுபவிக்கும். நாட்டின் மற்ற மாநிலங்களில் இல்லாத சிடி, பென் டிரைவ் அரசியலை, கர்நாடகாவில் மட்டும் பெரிதுபடுத்துகின்றனர். இத்தகைய அரசியல், மாநிலத்துக்கு சாபம்.லோக்சபா தேர்தலில், உத்தரகன்னடா தொகுதியில் நாமதாரி சமுதாய வேட்பாளரை களமிறக்காமல், காங்கிரஸ் அநியாயம் செய்துள்ளது. இச்சமுதாய தலைவர்களை ஓரங்கட்ட, காங்கிரஸ் முயற்சிக்கிறது. பா.ஜ., அரசில் இந்த சமுதாயத்தினருக்கு, கார்ப்பரேஷன், வாரியங்களில் இடம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் அரசு அளிக்கவில்லை. தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் அரசு இருக்குமா என்பது தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Senthoora
மே 28, 2024 21:23

இவர் சாமியாரா? அதுக்கு தகுதி இல்லை. அரசியல் பேசலாமா சாமிஜி .


duruvasar
மே 28, 2024 08:05

எல்லாம் சிவகுமாரின் கையில் இருக்கிறது.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ