உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யதீந்திரா, விஜயேந்திரா ஒரே மேடையில் பேச்சு

யதீந்திரா, விஜயேந்திரா ஒரே மேடையில் பேச்சு

மைசூரு, : நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஒரே மேடையில் பரஸ்பரம் நட்புடன் பேசினர்.மைசூரின் ஆலனஹள்ளியின், குதேருமடத்தில், புதிய கட்டடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பல்வேறு மடங்களின் மடாதிபதிகள், காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திரா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜி.டி.தேவகவுடா உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும், ஜி.டி.தேவகவுடாவுக்கு, யதீந்திராவை சிறு வயதில் இருந்தே நன்கு தெரியும். ஏனென்றால், சித்தராமையாவும், ஜி.டி.தேவகவுடாவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எனவே ஜி.டி.தேவகவுடா, யதீந்திரா அருகில் அமர்ந்து நட்புடன் பேசினர்.இதே மேடையில் விஜயேந்திராவும், யதீந்திராவும் கைகுலுக்கி பேசினர். குத்து விளக்கை ஏற்றும் போது, யதீந்திராவின் கையை பிடித்து விளக்கேற்றியது, அனைவரையும் கவர்ந்தது. முக்கியமான பணிகள் இருந்ததால், நிகழ்ச்சி முடியும் முன்பே, யதீந்திரா அங்கிருந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை