உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்க கணக்குல 100 வீடு; சொல்கிறார் சித்தராமையா!

எங்க கணக்குல 100 வீடு; சொல்கிறார் சித்தராமையா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டி தருவோம்' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல் கூறிய பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டி தரப்படும் என உறுதியளித்தார். தற்போது, வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் கர்நாடகா அரசு சார்பில் கட்டி தரப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடகா சார்பில்

இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில், '' கர்நாடகா கேரளாவுக்கு ஆதரவாக நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா அரசு சார்பில், 100 வீடுகள் கட்டித் தருவோம். ஒன்றாக இணைந்து செயல்பட்டு இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்போம்'' என பதிவிட்டுள்ளார். சித்தராமையாவின் முடிவிற்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல், பிரியங்கா நன்றி தெரிவித்தனர்.

ராகுல் பாராட்டு

'' வயநாட்டின் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையில், தாராளமாக ஆதரவளித்த கர்நாடக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதற்கான உங்கள் அர்ப்பணிப்பு வரவேற்கதக்கது. இந்தியர்களின் கருணையும் ஒற்றுமையும் தான் வயநாட்டுக்கு இப்போது தேவைப்படும் பலம்'' என ராகுல் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

karunamoorthi Karuna
ஆக 04, 2024 08:48

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் 100 கர்நாடக அரசு சார்பில் 100 மொத்தம் 200 கிடைக்குமா


Ramesh Sargam
ஆக 03, 2024 20:59

கடைசியில் ஒரே ஒரு நூறு வீடு கட்டிவிட்டு செந்தில் கவுண்டமணி காமெடி போல, இதுதாங்க அந்த நூறு வீடு என்று ராகுலும், சித்துவும் மாறி மாறி கூறுவார்கள் பாருங்கள்.


ராஜ்
ஆக 03, 2024 20:38

கமிஷன் எவ்வளவு சதவிகிதம் நாற்பதா அல்லது அறுவதா


ராஜ்
ஆக 03, 2024 20:37

பினராயி விஜயன் உங்களுக்கு இடம் கொடுக்க மாட்டார் வீடு கட்டிக் கொடுப்பதற்கு என்ன செய்வீர்கள்


ராஜ்
ஆக 03, 2024 20:36

நீங்கள் கட்டிக் கொடுப்பதற்குள் அடுத்த மழைக்காலம் வந்துவிடும்.மறுபடியும் எல்லாம் புதைந்து விடும்.முதலில் வயநாட்டை விட்டு மக்களை வெளியேற்ற வேண்டும்


metturaan
ஆக 03, 2024 20:35

நொந்து போயுள்ளவர்களை மேலும் நோகடித்து ஆதாயம் தேடாமல் மனசாட்சிக்கு வஞ்சகம் செய்யாது விரைவில் சொன்னவண்னம் நல்லது நடந்தால் வீடிழந்த மக்களின் சார்பில் வாழ்த்துக்கள் ...


என்றும் இந்தியன்
ஆக 03, 2024 19:06

இப்பொழுது டிராமா ஆரம்பம். அது என்ன 100 வீடு???அந்த பக்கம் வயநாடு எம் பி பப்புவும் அதே 100 வீடு???கடைசியில் கர்நாடக காங்கிரஸ் கொடுத்தது 100 வீடு என்று ஆகிவிடும்??


Mali
ஆக 03, 2024 17:39

தேர்தல் முன்னாடி நாங்க ஆட்சியில் வந்தால் நீட் தேர்வு ரத்து ஆகும், தேர்தல் அப்புறம் பிம்பிளிக்கு பியாப்பி. வயநாடு இடைத்தேர்தல் முன்னாடி வீடு கட்டிக்கொடுக்கப்படும். தேர்தலுக்கு அப்புறமா தேதி சொன்னோமா? யாராவது கேட்டால், வயநாட்டில் 60% சிறுபான்மையர் மத்திய அரசு இல்ல ஒன்றிய அரசு ஒரு செங்கல் வாங்க கூட எங்களுக்கு ரூபாய் கொடுக்கல, அதனால நீங்க அவங்க கிட்ட தான் கேட்கணும். இந்த முதல்வருக்கு மைசூருள ஏகப்பட்ட வீடு இருக்கு. நம்ம கட்டுமரம் கூட 3 வீடுதான் இருக்கு.


cbonf
ஆக 03, 2024 17:39

o அவரது துணை முதல்வர் டி.கே. shivkumar மும்பையில் 125 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை பினாமியாக வைத்திருந்தார் o ED அனைத்து 125 அடுக்குமாடி குடியிருப்புகளையும் கைப்பற்றியது. o காங்கிரஸ் இந்த தேசத்தை ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு அமைச்சகத்திலும் கொள்ளையடித்து நம்மை அழித்துவிட்டது


Venkatasubramanian krishnamurthy
ஆக 03, 2024 17:37

நூறு வீடுகள் என்பது முன்பு ராகுல் முன்மொழிந்ததா அல்லது கர்நாடகா அரசு தனியாகத் தருகிறதா என்பதற்கு தெளிவு இல்லை. காங்கிரஸ் சார்பில் நூறு வீடுகள் என ராகுல் சொன்னதை கர்நாடக அரசு கட்டித் தருகிறதா என்று தெரிய வேண்டும். எதுவாக இருந்தாலும் அது தேர்தல் படுத்தும் பாடு.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ