உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 பா.ஜ., செய்தி தொடர்பாளர்கள் நியமனம்

11 பா.ஜ., செய்தி தொடர்பாளர்கள் நியமனம்

பெங்களூரு : கர்நாடகா பா.ஜ.,வுக்கு, 11 செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின், கட்சியை பலப்படுத்தும் பணியில் விஜயேந்திரா ஈடுபட்டுள்ளார். சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், தலைமை கொறடா; சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், தலைமை கொறடா, மாநில துணைத் தலைவர்கள், பொது செயலர்கள், செயலர்கள், வெவ்வேறு பிரிவு தலைவர்களை அவர் நியமித்தார்.தற்போது, 11 செய்தி தொடர்பாளர்களை நேற்று நியமித்து உத்தரவிட்டுள்ளார்.தலைமை செய்தி தொடர்பாளராக முன்னாள் எம்.எல்.சி., அஸ்வத் நாராயணா; செய்தி தொடர்பாளராக ஹரிபிரகாஷ் கோணமனே, சலவாதி நாராயணசாமி, தேஜஸ்வினிகவுடா, நவீன், மகேஷ், சந்திரசேகர், நரேந்திர ரங்கப்பா, சுரபி ஹோதிகெரே, அசோக் கவுடா, வெங்கடேஷ் தொட்டேரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.சமூக வலை தள பிரிவு ஒருங்கிணைப்பாளராக பிரசாந்த் மாகனுார், இணை ஒருங்கிணைப்பாளராக நரேந்திர மூர்த்தி; தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளராக நிதின்ராஜ் நாயக்; இணை ஒருங்கிணைப்பாளராக சியாமளா ரகுநந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளராக கருணாகர காசலே, இணை ஒருங்கிணைப்பாளராக பிரசாந்த் கெடஞ்சி ஆகியோர் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை