உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் 12.74 கிலோ அளவிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில், பயணிகள் சட்ட விரோதமாக தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி, விமான நிலையத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, 12.74 கிலோ அளவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8.17 கோடி. ஒரே நாளில் 20 வழக்குகளில் 8.37 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 10 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். வெவ்வேறு நாடுகளில் இருந்து மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில், ஈடுபட்டவர்கள் குறித்து எந்த விபரத்தையும் அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி