உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுதும் பயன்பாட்டில் 120 கோடி அலைபேசிகள்

நாடு முழுதும் பயன்பாட்டில் 120 கோடி அலைபேசிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்துார்: நம் நாட்டில் 120 கோடி அலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளதாக, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நம் நாட்டில் 120 கோடி அலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுதும், 80 சதவீத மக்கள் அலைபேசியை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் 4ஜி தொழில்நுட்பத்தை நம் நாட்டில் உருவாக்கியுள்ளோம். இதன் வாயிலாக நாட்டில் 100 சதவீத கவரேஜை ஏற்படுத்த முடியும்.வடகிழக்கு மாநிலங்களின் பலம் மற்றும் திறன்களின் அடிப்படையில் வளர்ச்சிக்கான உத்தியை உருவாக்குவோம். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 12, 2024 08:52

மக்களுக்கு சாப்பாடு கூட இரண்டாம் பட்சம். மொபைல் ஃபோன், wifi இல்லாமல் இந்தகாலத்தில் நம் மக்களால் இருக்கவே முடியாது. நானும் ஒரு மொபைல் அடிமை ஆனால் தேவையானவற்றிக்கு மட்டும் பயன்படுத்துவேன்.


malanguyasin
ஜூலை 12, 2024 08:26

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள உள் கிராமங்களில் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை பேசும்போது தொடர்பு துண்டிக்கப்படுகிறது இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ