உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு

 உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோ அருகே, 170 செம்மறியாடுகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. லக்னோவில் ராஷ்ட்ரீய பிரேர்னா ஸ்தல் எனப்படும் தலைவர்கள் நினைவிடம் உள்ளது. இங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரமாண்ட சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது. நேற்று திடீரென இப்பகுதியில் 170 செம் மறியாடுகள் மர்மமாக உயிரிழந்தன. இது குறித்து மடியான் போலீஸ் ஸ்டேஷனில், 'ஆஸ்ரா ஹெல்பிங் ஹேன்ட்ஸ்' என்ற அரசுசாரா அமைப்பின் நிறுவனர் சாரு காரே புகார் அளித்தார். அதில், 'செம்மறியாடுகளுக்கு யாரேனும் விஷம் கொடுத்தனரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். ஆடுகளின் திடீர் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், 'ஒவ்வொரு செம்மறியாட்டுக்கும் தலா 10,000 ரூபாய் நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை