உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலக்காடு மாவட்டத்தில் 2 முதியவர்கள் மர்ம சாவு

பாலக்காடு மாவட்டத்தில் 2 முதியவர்கள் மர்ம சாவு

பாலக்காடு,:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மங்கரை மாங்குறிச்சியை சேர்ந்தவர் பங்கஜம், 83; இவரது கணவர் வாசு. 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களின் மூத்த மகன் பாபுராஜ் அமெரிக்காவிலும், இரண்டாவது மகன் ராஜேஷ் துபாயிலும், மகள் உஷா மத்திய பிரதேசத்திலும் வசிக்கின்றனர். பங்கஜமும், அவரது கணவரின் சகோதரர் ராஜன், 80, என்பவரும் மாங்குறிச்சி வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை பங்கஜத்தை, அவரது மகன் ராஜேஷ் போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை எடுக்கவில்லை. பின், உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் வீட்டிற்கு சென்று கதவை பலமுறை தட்டியும் திறக்காததால், உடைத்து உள்ளே சென்றனர். ராஜன் மேல் மாடியில் துாக்கிட்டும், பங்கஜம் கீழ் அறை தரையில் இறந்த நிலையிலும் காணப்பட்டனர். மங்கரை இன்ஸ்பெக்டர் பிரதாப் கூறுகையில், ''பிரேத பரிசோதனைக்கு பின் தான் எதுவும் தெரியவரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை