உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛20 ஆண்டுகள் முயற்சித்தும் முடியவில்லை: மன்னிப்பு கேட்கும் மம்தா

‛‛20 ஆண்டுகள் முயற்சித்தும் முடியவில்லை: மன்னிப்பு கேட்கும் மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛20 ஆண்டுகளாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை, தேசிய விடுமுறையாக அறிவிக்க முயற்சித்தும் முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளை நினைவு கூறும் நிகழ்வில் மம்தா பானர்ஜி பேசியதாவது: ஆட்சிக்கு வருவதற்கு முன் நேதாஜியின் மறைவு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பா.ஜ., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் மறந்துவிட்டது. 20 ஆண்டுகளாக, சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க முயற்சி செய்தேன். ஆனால் என் முயற்சி தோல்வி அடைந்தது; என்னை மன்னித்து விடுங்கள். நேதாஜி இறந்த தேதி கிடைக்க பல ஆண்டுகள் ஆனது. இது துரதிர்ஷ்டம். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை