உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய குழு உறுப்பினர் உட்பட 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் சரண்

மத்திய குழு உறுப்பினர் உட்பட 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் சரண்

ஜக்தல்பூர்: த டை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் உட்பட, 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் போலீசாரிடம் சரண் அடைந்தனர். நாடு முழுதும் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய உறுதிபூண்டுள்ளது. நக்சல் பாதிப்பு அதிகமிருந்த சத்தீஸ்கரின் அபுஜ்மார் மற்றும் வடக்கு பஸ்தார் ஆகிய பகுதிகள் நக்சல் இல்லாத பகுதிகளாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பஸ்தார் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் முன்னிலையில், 210 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சரண் அடைந்த நக்சல்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ஒருவர். தண்டகாரன்ய சிறப்பு மண்டல குழுவை சேர்ந்த நான்கு நக்சல்கள், டிவிஷனல் குழு உறுப்பினர்கள், 21 பேர், பகுதி குழு உறுப்பினர்கள், 61 பேர் உட்பட மொத்தம் 210 நக்சல்கள் தற்போது சரணடைந்துள்ளனர். ஏ.கே.47 துப்பாக்கிகள் 19, தானியங்கி துப்பாக்கிகள் 17, இலகு ரக துப்பாக்கிகள் 30 உட்பட மொத்தம் 153 ஆயுதங்களையும் நக்சல்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சரண் அடைந்தவர்களை பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 18, 2025 10:52

சரணடைந்த 210 பேரில் இளம் வயதினர் நிறைய ஆண்களும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. மூளை சலவை செய்யப்பட்டு நக்சல் இயக்கத்தில் சேர்ந்து தங்களது வாழ்க்கையை இது வரை வீணடித்துவிட்டார்கள். இனிமேலாகிலும் பொது வாழ்வில் ஒன்றிக்கலந்து மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் அவர்களின் மறுவாழ்வுக்கான நலத்திட்டங்களை உபயோகப்படுத்தி நல்ல நடத்தையுடன், வாழ்வை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை