உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஆந்திராவுக்கு அமராவதி தான் தலைநகர்": சந்திரபாபு திட்டவட்டம்

"ஆந்திராவுக்கு அமராவதி தான் தலைநகர்": சந்திரபாபு திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: “அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம்” என அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு அதன் தலைநகரமாக ஹைதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t6ld69rd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என உத்தரவிட்டார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அந்த உத்தரவை அவர் திரும்பப்பெற்றுக் கொண்டார். தற்போது அமராவதி ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வருகிறது.

தலைநகர் என்ன?

இந்நிலையில், நாளை(ஜூன் 12) ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு, அம்மாநில தலைநகர் குறித்து விளக்கமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மூன்று தலைநகர், நான்கு தலைநகர் என வஞ்சக செயல்களால் மக்களோடு விளையாட மாட்டோம். அமராவதி தான் எங்களின் தலைநகர். ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி தான் இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை. அதேநேரம், விசாகப்பட்டினம் மாநிலத்தின் வர்த்தக தலைநகராக இருக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜூன் 12, 2024 07:18

அவர்களை கொல்டிகள் என்பதில் தவறேதுமில்லை!


sankaranarayanan
ஜூன் 11, 2024 23:04

அமராவதியையை இடித்து தள்ளிய ஜகனிடமிருந்து இடிப்பதற்கான முழு செலவுவான தொகையையும் இப்பொது உள்ள அரசு முழுவதும் வசூலித்து மக்கள் பணம் இனி விரயம் ஆகாமல் பாரத்துக்கொள்ள வேண்டும் இது எல்லா அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு பாடமாகும் மக்கள் பணம் மகேசன் பணம்


RAAJ68
ஜூன் 11, 2024 21:44

திமுக அண்ணா திமுக மாதிரி அங்க இங்க இரண்டு பேரும் மாற்றி மாற்றி எதையாவது குழப்பிக் கொண்டே இருக்கிறீர்கள் மக்கள் தான் பாவம்


sankaranarayanan
ஜூன் 11, 2024 21:42

ஜெகனின் துக்ளக் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்த சந்திரபாபுவிற்கு நன்றி மூன்றுதலைநகரை சமாளிப்பது சாமானியமா இதை சரித்திரத்திலேயே கேள்விப்பட்டது கிடையாது எவ்வளவு மக்கள் பணம் விரயம் என்று தெரியமா அந்த ஜெகனுக்கு எதற்காக மூன்று தலைநகரம் யார் வீட்டு பணம் விரயம் ஒரு தலைநகரை வைத்து சமாளிப்பதே கடினமாக உள்ளது இனிமேல் ஆந்திராவிற்கு அமராவதி சரித்திரத்திற்கு ஒரு சந்திரபாபு என்றே சொல்லுங்கள்


Ramesh Sargam
ஜூன் 11, 2024 20:28

இப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. யார் மதிப்பிற்குரிய அப்பன் வீட்டு பணம்? ஏன் இப்படி இந்த நாயுடு விடாப்பிடியாக தலைநகரை அமராவதியிலேயே நிறுவப்பார்க்கிறார். போனமுறை ஆட்சியில் இருந்தபோது பலகோடிகள் செலவுசெய்தார். ஆனால் தலைநகர் உருவாகுவதற்குள், பிறகு வந்த ஜெகன், அவற்றை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கி, விசாகப்பட்டினத்தில் நிறுவ முயற்சி மேற்கொண்டார். இப்பொழுது மீண்டும் நாய்டு அமராவதியில் தலைநகரை நிறுவ முயற்சிக்கிறார். மக்களின் வரிப்பணம் இப்படி விரயமாவது சரியல்ல.


Prabhakaran
ஜூன் 11, 2024 18:49

திரு. நாயுடு ஆந்திராவுக்கு நிரந்தர தலைநகராக அமராவதியை கட்டமைப்பார். துக்ளக் ஜெகனின் முட்டாள்தனம் தவறு என்று நிரூபிக்க போகிறார். வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை