உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "மனைவி திட்டினால் இதை செய்யுங்கள்": ஒவைசி அட்வைஸ்

"மனைவி திட்டினால் இதை செய்யுங்கள்": ஒவைசி அட்வைஸ்

ஹைதராபாத்: 'மனைவி உங்களை திட்டினால், தேவையின்றி கோபப்பட வேண்டாம். அவரை அடிப்பது ஆண்மை இல்லை. மனைவியிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும்' என ஏஐஎம்ஐஏ கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவுரை வழங்கி உள்ளார்.இது குறித்து ஓவைசி கூறியிருப்பதாவது: நான் பல முறை இது பற்றி கூறியிருக்கிறேன். அது பலரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. உண்மையில் மனைவியின் ஊதியத்தில் கணவருக்கு எந்த வித உரிமையும் இல்லை. ஆனால் கணவரின் வருவாயில் மனைவிக்கு உரிமை உள்ளது.

கோபப்படாதீர்கள்

மனைவியிடம் கொடூரத்துடன் நடந்து கொள்பவர்கள், அவர்களை அடிப்பவர்கள் உள்ளனர். மனைவி உங்களை திட்டினால், தேவையின்றி கோபப்பட வேண்டாம். அவரை அடிப்பது ஆண்மை இல்லை. மனைவியிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஓவைசி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

shakti
பிப் 06, 2024 14:22

ஓலா ஊபர் கோச்சுக்க மாட்டாரா ??


ஆரூர் ரங்
பிப் 05, 2024 12:12

தப்பு செய்யும் மனைவியை குச்சியால் அடிக்கும் உரிமையை அரபி நூல் அளித்துள்ளதாக படித்திருக்கிறேன்.???? அதற்கு எதிராகப் பேசலாமா?


ArGu
பிப் 07, 2024 21:19

ஓசிக்கு பத்வா கன்பார்ம் போலயே ??


Raa
பிப் 05, 2024 11:52

இதிலெல்லாம் ரொம்ப மரியாதையா நடத்துவங்க, ஆனால் விவாகரத்து பண்ணும்போது மட்டும் சிம்ப்பிளா முடிந்துவிடும்.


N.Purushothaman
பிப் 05, 2024 06:24

எல்லாம் முத்தலாக் முடிவிற்கு வந்ததால் வந்த மாற்றம் .... தற்போதைய இஸ்லாமிய பெண்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் ...பொதுவாக அவர்கள் தங்கள் கணவரை பிடிக்கைவில்லையென்றால் க்ஹுல முன்னெடுக்கலாம் ...அதாவது அவர்கள் அவரின் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லையென்று முடிவெடுக்கலாம். தற்போதைய பல இஸ்லாமிய பெண்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு கல்வியில் முன்னேறி வருவதால் அடிமை மனப்பான்மை கணவருடன் கட்டாயமாக வாழ வேண்டிய நிலை இல்லை ...


Libra
பிப் 05, 2024 05:56

திருக்குரான் நாமளும் படிக்கலாம் படிக்கணும் பல நல்ல வாழ்வில் நெறிமுறைகள் உண்டு. படிப்பது2 இராமாயணம் ஆனால் இடிப்பதோ பெருமாள் கோவில். முதலில் முத்தலாக் முறை தப்புதான்னு சொல்லுங்க ஓவெஸி பாய் (நாங்க சதி என்கிற உடன்கட்டை ஏறும் வழக்கம் தப்புன்னு வங்காளத்தைச் சேர்ந்த சிறந்த இந்து சீர்திருத்தவாதியான ராஜா ராம்மோகன் ராய் 1812 இல் இயக்கம் தொடங்கி 1829 சதி ஒழிப்பு சட்டம் வந்தது. ஆனால் நீங்களோ உங்கள் மதம் சார்ந்த நபர்கள் முத்தலாக் தடை சட்டம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை


பேசும் தமிழன்
பிப் 05, 2024 08:48

எந்த மதமாக இருந்தாலும் சரி... அதில் உள்ள தவறுகளை.... தவறு என்று ஒப்பு கொள்ள வேண்டும்... தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்..... அவன் தான் மனிதனாக இருப்பான்.... இல்லையெனில் மதம் என்ற மதம் மாறிய பிடித்தவனாக தான் இருப்பான்.


பெரிய ராசு
பிப் 06, 2024 17:12

சார் சரி பேசும் தமிழன் எப்படி ..


ராஜா
பிப் 05, 2024 04:41

மனைவிகள் என்று தலைப்பை மாற்றுங்கள். என்றைக்கு ஒன்று மட்டும் இருந்திருக்கிறது?


Ramesh Sargam
பிப் 05, 2024 00:09

எத்தனையாவது மனைவியை அப்படி அன்போடு நடத்தவேண்டும்? நல்லவேளை, அன்போடு நடத்துங்கள் என்று கூறி விட்டுவிட்டார். அவர்களுக்கு தாஜ் மஹால் போன்ற கட்டிடங்களை கட்டுங்கள் என்று கூறவில்லை? சென்னையில் இருந்து ஆக்ரா செல்வதற்கே காசு இல்லை. இதில் எங்கிருந்து தாஜ் மஹால் கட்டுவது...???


LAX
பிப் 05, 2024 00:02

முதல் பத்திக்கும (para) இரண்டாவது பத்திக்கும் முரண்பாடு உள்ளதே.. ஏதோ பொடி வைத்து பேசியிருப்பதாகவே தெரிகிறது..


அப்புசாமி
பிப் 04, 2024 22:52

ஒரு மனைவி திட்டினால் அடுத்த மனைவி வீட்டிற்கு சென்றுவிடலாம்.


தமிழ்வேள்
பிப் 04, 2024 21:07

மூர்க்க மத புத்தக அறிவுரைகளை பின்பற்றாமல் பெண்களை சக ஜீவன் களாக மதித்து நடக்கும் போக்கே நல்லது.. அவர்கள் பிராப்பர்ட்டி அல்ல..ரத்தம் தசை உணர்வுகள் உள்ள சக மனிதர்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ