உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "எங்கள் கூட்டணி அதிக வெற்றி பெறும்": கார்கே நம்பிக்கை

"எங்கள் கூட்டணி அதிக வெற்றி பெறும்": கார்கே நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'எங்கள் கூட்டணி கட்சிகள் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ.,வை தோற்கடிக்கும்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நிருபர்களிடம் கார்கே கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=er1fp4st&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் 3 தொகுதிகளில் கூட்டணி கட்சி போட்டியிடுகிறது. இது ஜனநாயகம். எதேச்சதிகாரம் அல்ல, பா.ஜ.,வை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வெளியில் இருந்து ஆதரிப்போம் என மம்தா கூறியுள்ளார்.

நடவடிக்கை

சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை நாங்கள் புல்டோசர் பயன்படுத்தவில்லை. தூண்டுதல் செய்பவர்கள் மீது, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்தும் பாதுகாக்கப்படும். 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் அரிசி வழங்குவதாக பிரதமர் மோடி கூறுகிறார். நாங்கள் ஆட்சி அமைத்த பின், 10 கிலோ வழங்குவோம்.

46 தொகுதிகளில் வெற்றி

மஹாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 46 தொகுதிகளில் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி கட்சிகள் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.,வை தோற்கடிக்கும். சதித்திட்டத்தின் அடிப்படையில், மகாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இது பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி தான் நடக்கிறது. உண்மையான கட்சிகளிடம் இருந்து சின்னம் பறிக்கப்பட்டு, பா.ஜ., வை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
மே 18, 2024 20:04

வாய்பில்லை ராஜா..... வாய்ப்பே இல்லை.... வேண்டுமானால் இத்தாலி அல்லது பாகிஸ்தான் நாட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்..... உங்கள் கொள்கைக்கு..... அங்கே சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது.... ஆனால் இந்தியாவில் உங்களுக்கு வாய்பில்லை.


Rengaraj
மே 18, 2024 15:54

யார் வேண்டுமென்றாலும் வரட்டும் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மத்தியில் ஐந்து வருடங்களும் நிலையான ஆட்சி செய்ய ஒரு அரசாங்கம் தேவை இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்று சேர்ந்து "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து வருடங்கள் நிலையான ஆட்சி தருவோம், அப்படி தரமுடியாத பட்சத்தில் எங்கள் பதவியை ராஜினாமா செய்வோம் " என்ற உறுதிமொழியை மக்களுக்கு தருவார்களா ? அப்படி சொல்லக்கூடிய தைரியம் அவர்களுக்கு உள்ளதா ? மக்கள் இலவசங்களுக்கு ஆசைப்படாமல் யோசித்து நிலையான ஒரு ஆட்சியை தரும் கட்சிக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும்


A1Suresh
மே 18, 2024 14:05

சுப்பிரமணிய சுவாமி, எஸ்வீசேகர் என்று இண்டி கூட்டணி ஆள் சேர்க்கை நடைபெறுகிறது


ஆரூர் ரங்
மே 18, 2024 13:45

இட்டாலில நின்னா அதிகமா கிடைக்கலாம். பாரதத்தில? நோ சான்ஸ்.


rajan_subramanian manian
மே 18, 2024 13:05

என்ன? ஈவீம் இயந்திரங்களில் தாமரைக்கு பதில் கை சின்னம் வருமாறு எல்லா தொகுதிகளிலும் மாற்றிவிட்டார்களா? பதவி ஏற்பு நாள் எப்போது? அயலக துறை எங்களுக்குத்தான்


M Ramachandran
மே 18, 2024 12:54

இது தான் அப்பா பொழப்பை கெடுகிறது எந்த நம்பிக்கயில் இப்படி ரீல் உடூரார்


Kumar Kumzi
மே 18, 2024 12:38

கூட்டணி என்று உலக மக்களால் அன்போடு அழைக்கப்படும்!


A1Suresh
மே 18, 2024 12:09

உலக காமெடியன்கள் இவர்கள் போதா குறைக்கு சுப்பிரமணிய சுவாமி வேறு


Prabakaran J
மே 18, 2024 11:49

Engal kuttany athigam vetri perum - Nanga illai.


A Viswanathan
மே 18, 2024 18:30

நீங்கள் நம்புவதை யாரும் தடுக்க முடியாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை