உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேபரேலியில் போட்டியிட்டாலும் அமேதியில் என்றும் இருப்பேன்: சொல்கிறார் ராகுல்

ரேபரேலியில் போட்டியிட்டாலும் அமேதியில் என்றும் இருப்பேன்: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமேதி: ''நான் ரேபரேலியில் போட்டியிடுகிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் அமேதியில் இருந்தேன், இப்போது இருக்கிறேன், எப்போதும் இருப்பேன்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியுள்ளார்.அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அமேதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்த ராகுல் பேசியதாவது: எனது அப்பா ராஜிவ் உடன் 42 ஆண்டுகளுக்கு முன்னதாக முதன்முறையாக அமேதி வந்தேன். நான் அரசியலில் எதைக் கற்றுக்கொண்டேனோ, அதை அமேதி மக்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது சாலைகளும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. இங்குள்ள மக்களுக்கும் என் தந்தைக்கும் இடையே உள்ள அன்பின் உறவை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் ரேபரேலியில் போட்டியிடுகிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் அமேதியில் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன், எப்போதும் இருப்பேன். முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியும் அதன் தலைவர்களும் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதி தூக்கி எறிவோம் என்று தெளிவாக கூறுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க அனுமதிப்பீர்களா? அதை அழிக்கும் சக்தி உலகில் உண்டா?அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதுதான் முதலில் நாம் செய்ய வேண்டியது. ஏனென்றால் உங்கள் குரல், உங்கள் எதிர்காலம், உங்கள் சிந்தனை அதில் பொதிந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏழை மக்களுக்கு எது கொடுக்கப்பட்டிருந்தாலும் அது நில உரிமையாக இருக்கட்டும், விவசாயிகளுக்கான உதவியாக இருக்கட்டும் அல்லது பசுமைப் புரட்சியாக இருக்கட்டும், இவை அனைத்தும் இந்த புத்தகத்தின் (அரசியலமைப்பு) பின்பகுதியில் சாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ravichandran S
மே 18, 2024 15:22

வய நாடு தொகுதி மக்களுக்கு என்ன பதில் ரெடிமேடாக ஏதாவது வைத்திருப்பார் இவர் முதலில் இந்தியாவை விட்டு வெளியே செல்லாமல் இருந்தாலே போதும் அடிக்கடி ஏதாவது வெளிநாடு சென்று விடுவார் ஏற்கனவே வயநாடை கழுவிவிட்டார்


ஆரூர் ரங்
மே 18, 2024 11:09

அமேதி மக்கள் தான் விரட்டி விட்டார்களே.இன்னும் அவர்களை விடாமல் தொந்தரவு செய்ய வேண்டுமா?


Raghuraman Kumaraswami
மே 17, 2024 21:55

If he had guts he should have announced about coning from two seats in the ning itselfWhy this drama and cheating of publicThey are not in a position to make their candidates win to attain a respec numberThen why they must anyhow be elected just to enjoy perks and power for nothing


RAJ
மே 17, 2024 21:18

நீ எங்க இருந்தாலும் தம்பிடிக்கு பிரயோஜனம் இல்ல என்னமோ அமேதி மக்க அடம் பிடிச்சு கதற மாதிரி கப்ஸா உடற வயநாட்டுக்கே ஒண்ணும் செஞ்சு கிழிக்கல


Jebamani Mohanraj
மே 17, 2024 20:07

கர்மா வேலை செய்யுது ரேபேரெலி வாக்காளர்கள் நீ அமேதியில் இருப்பதற்கு உனக்கு எதுக்கு நாங்க ஓட்டு போடனும் என்று முடிவெடுத்தால் இளவரசருக்கு டெபாசிட் பறி போகும்


Ramesh Sargam
மே 17, 2024 19:53

அப்ப பாட்டியை பார்க்க இத்தாலி போக மாட்டீங்களா?? பாட்டி பாவம்


C.SRIRAM
மே 17, 2024 22:12

போனால் இந்தியாவுக்கு நல்லது


தமிழ்வேள்
மே 17, 2024 19:46

கேர் ஆஃப் அட்ரஸ் பட்டாயா ஒன்லிதோற்றாலும் ஜெயித்தாலும் இருக்கப் போவது பட்டாயாவில் மட்டுமே


kumarkv
மே 17, 2024 19:04

இந்த பக்கமே வரமாட்டேன்


chandramohan
மே 17, 2024 18:50

This superman how many days visited amethi in the past years rather than stayed there Useless fellow


குமரி குருவி
மே 17, 2024 18:46

அப்போ வயநாடு காலியா..


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை