உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "வேலை தேடுவதை விட வேலை கொடுக்கும் நபராக முன்னேறிய இளைஞர்கள்": பிரதமர் மோடி

"வேலை தேடுவதை விட வேலை கொடுக்கும் நபராக முன்னேறிய இளைஞர்கள்": பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வேலை தேடுவதை விட, வேலை வழங்குபவராக இந்தியாவின் இளைஞர்கள் மாறி வருகிறார்கள்' என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.டில்லி பாரத் மண்டபத்தில் நடந்த ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 2047ம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில், ஐ.டி., துறையில் இந்தியா பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது. இந்தியாவில் ஸ்டார்ட்அப் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களின் திறனை உலகம் பார்ந்து வியந்து வருகிறது. மக்களின் சிந்தனையை மாற்றியுள்ளோம். வேலை தேடுவதை விட, வேலை வழங்குபவராக இந்தியாவின் இளைஞர்கள் மாறி வருகிறார்கள். 1.25 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
மார் 20, 2024 20:01

வேலைக்கு ஆள்கிடைக்காமல் தொழிலதிபர்கள் திண்டாடுகிறார்கள். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் உள்ள வேலையை எடுப்பதா அல்லது எண்பதாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள நல்ல கம்பெனியில் சேர்வதா என்று இளைஞர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள். பிஜேபி அரசில் இந்தியாவின் பொருளாதாரம் விண்ணைக்கிழித்துக்கொண்டு உயரே செல்கிறது.


தஞ்சை மன்னர்
மார் 20, 2024 17:50

சிந்திக்க முடியாதபடிதான் ஆக்கி வைத்து விட்டீர்களே


வி.ஐ.பி
மார் 20, 2024 17:19

வேலை தேடுறவங்க வேலை குடுக்குறாங்கன்னா, யார் வேலை தேடறாங்க?


Ram pollachi
மார் 20, 2024 17:00

நீங்கள் வேலை கொடுத்தாலும் இங்கே வேலை செய்ய யாரும் தயாராக இல்லை


Apposthalan samlin
மார் 20, 2024 16:36

அடிச்சு விடுகிறார் பாருங்க


Narayanan Muthu
மார் 20, 2024 14:08

வாய் மட்டும் இல்லன்னா எப்போவோ நாய் தூக்கிட்டு போயிருக்கும்னு ஒரு சொலவடை எங்கூரில் கேள்விப் பட்டிருக்கேன்.


RAMAKRISHNAN NATESAN
மார் 20, 2024 16:59

சொன்னதை வெச்சு இன்னும் கலாய்க்கறீங்களே ??


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 20, 2024 17:21

நல்லா யோசிச்சு பாருங்க .... சொல்லியிருப்பாங்க ....


Barakat Ali
மார் 20, 2024 13:44

குஜராத்திகள், மார்வாடிகள் பிசினஸில் கில்லாடிகளாக இருக்கலாம் .... அனைவருக்கும் அந்தத் திறமை வந்துவிடுமா ????


மேலும் செய்திகள்