வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகத்திலும் சிலர் ஊடகம் என்ற பெயரில் உலாவுகிறார்கள் அவர்களை போலிசார் விசாரணைக்கு அழைத்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்
ஹைதராபாத்: நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 37 பேர் இன்று ஒரே நாளில் தங்களின் ஆயுத நடவடிக்கையை கை விட்டுவிட்டு, சரண் அடைந்துள்ளனர் என்று தெலுங்கானா டிஜிபி ஷிவாதர் ரெட்டி கூறி உள்ளார்.நக்சல்களை ஒழிப்பதில் உறுதி பூண்டுள்ள மத்திய அரசு, அதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளது. பீஹார், ஜார்க்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கும் நக்சல் அமைப்பினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். பலர் தங்களின் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைந்தும் வருகின்றனர்.அந்த வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் 37 நக்சல்கள் தங்கள் ஆயுத நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, அன்றாட வாழ்க்கைச் சூழலில் இணைந்துள்ளனர். இவர்களில் பெண்கள் பலரும் உள்ளனர். இதுகுறித்து, தெலுங்கானா டிஜிபி ஷிவாதர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது; தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பைச் சேர்ந்த 37 பேர் சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் முக்கியமான நபர்கள். அவர்களுடன் மூத்த உறுப்பினர்களும் இருக்கின்றனர்.தெலுங்கானாவில் தற்போது 59 பேர் பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை கடந்தவர்கள். அவர்களும் சரண் அடைந்து, பிரதான நீரோட்டத்தில் இணைந்து அமைதியான வாழ்க்கையை வாழுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.இவ்வாறு டிஜிபி ஷிவாதர் ரெட்டி கூறினார்.சரண் அடைந்த நக்சல்கள் நவீன ஏகே 47 ரக துப்பாக்கி, இரண்டு எஸ்எல்ஆர் ரக துப்பாக்கி, நான்கு 330 ரக துப்பாக்கிகள், ஜி3 வகை துப்பாக்கி, 343 தோட்டாக்கள் ஆகிய ஆயுதங்களை போலீசிடம் ஒப்டைத்தனர்.
தமிழகத்திலும் சிலர் ஊடகம் என்ற பெயரில் உலாவுகிறார்கள் அவர்களை போலிசார் விசாரணைக்கு அழைத்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்