மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
பெங்களூரு: கர்நாடகாவில், பழங்குடியின வாக்காளர்கள், 37,719 பேர் இருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.கர்நாடகாவில், ஜனவரி 22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், 5 கோடியே 37 லட்சத்து, 85 ஆயிரத்து, 815 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், 2 கோடியே, 69 லட்சத்து, 33 ஆயிரத்து, 750 பேர் ஆண்கள்; 2 கோடியே, 68 லட்சத்து, 47 ஆயிரத்து, 145 பேர் பெண்கள்; 4,920 திருநங்கையர் உள்ளனர்.இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள மிகவும் பழமையான பழங்குடியின வாக்காளர்களின் எண்ணிக்கை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி முகநுால் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, ஜேனு குருபா, கொரபா ஆகிய பழங்குடியின வாக்காளர்கள், 37,719 பேர் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் ஓட்டு போட வைப்பதற்கு, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
4 hour(s) ago | 1
10 hour(s) ago | 2