மேலும் செய்திகள்
கொலைவெறி பிடித்தவர் யூனுஸ்: ஷேக் ஹசீனா விமர்சனம்
2 hour(s) ago
ரயில் பயணியர் பாதுகாப்புக்கு மனித வடிவ ரோபோ அறிமுகம்
4 hour(s) ago | 1
ராஞ்சி: 4வது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சில் சிக்கிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.நான்காவது டெஸ்ட் ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து, 134 ரன் பின்தங்கியிருந்தது. துருவ் ஜுரல் (30), குல்தீப் (17) ரன்கள் எடுத்து இருந்தனர்.3வது நாள் ஆட்டம் இன்று துவங்கிய சிறிது நேரத்தில் குல்தீப் யாதவ் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் 9 ரன்கள் எடுத்தார். துருவ் ஜூரல் சிறப்பாக விளையாடி 90 ரன்களில் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். இத்துடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 307 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து சார்பில் 'சுழலில்' மிரட்டிய பஷிர் 5, ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட் சாய்த்தனர்.145 ரன்களுக்கு ஆல் அவுட்
இதன் மூலம் 46 ரன்கள் முன்னிலை பெற்ற, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஆனால் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்தில் தொடர்ந்து விக்கெட்டை சந்தித்தது. 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் அஸ்வின் 5 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய அணிக்கு 192 ரன்களை இங்கிலாந்து அணி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்து உள்ளது. இந்திய அணி வெற்றி பெற 152 ரன்கள் மட்டுமே தேவை.
2 hour(s) ago
4 hour(s) ago | 1