மேலும் செய்திகள்
மேலும் ஒரு சிவிங்கிபுலி குட்டி மத்திய பிரதேசத்தில் பலி
4 minutes ago
பகவத்கீதை பாராயண நிகழ்ச்சி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
4 minutes ago
ஜாஷ்பூர்: சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் பகுதியில் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் சென்ற ஐந்து பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள கடங்கா பகுதியைச் சேர்ந்த சிலர் பக்கத்து ஊரான மனோரா பகுதியில் நடந்த பாட்டுக்கச்சேரியை பார்த்துவிட்டு, நேற்று அதிகாலை சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். துல்துலா அடுத்த பட்ரடோலி கிராமம் அருகே கார் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியதால், அதில் சென்ற ராம்பிரசாத் யாதவ், 26, உதய் குமார் சவ்கான், 18, சாகர் டிரிக்கி, 22, தீபக் பிரதான், 19, அங்கித் டிக்கா, 17, ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது பற்றி அறிந்த கிராமத்தினர் விரைந்து வந்து நொறுங்கிய காரில் சிக்கியிருந்த ஐந்து உடல்களையும் மீட்டனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
4 minutes ago
4 minutes ago