புதுடில்லி: 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு பிப்.27-ல் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நாடு முழுதும் 15 மாநிலங்களில் 56 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி காலம் நிறைவடைகிறது. இதில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களும் உள்ளனர். இதையடுத்து இப்பதவிக்கு தேர்தல் நடத்திட தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதவது, நாடு முழுதும் 15 மாநிலங்களில் 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப் .2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள இரண்டு மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப். 3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள். இதில் உபி.யில் (10), மகாராஷ்டிரா(6), பீகார்(6), மேற்கு வங்கம்(5), மத்தியப் பிரதேசம்(5), குஜராத்(4), கர்நாடகா(4),ஆந்திரப் பிரதேசம்(3) , தெலங்கானா (3), ராஜஸ்தான், (3) ஒடிசா(3), உத்தரகாண்ட்(1), சத்தீஸ்கர்(1), அரியானா,(1), மற்றும் இமாச்சலப் பிரதேசம்(1), என 56 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவி காலியாகிறது.இத் தேர்தலுக்கான அறிவிப்பு பிப்.8ம் தேதி வெளியாகும்.பிப்.,15ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்.,16ம் தேதி நடைபெறும். பிப்.27-ம் தேதி தேர்தல் நடைபெறும் அன்றைய தினமே, முடிவுகளும் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.