UPDATED : ஜூலை 26, 2024 04:13 PM | ADDED : ஜூலை 26, 2024 03:00 PM
புதுடில்லி: கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் பலியாகி இருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கீர்த்திவரன் சிங் ராஜ்யபசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் படி புலிகள் தொடர்பான தகவல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆணைய விவரப்படி; சமீபத்தில் புலிகள் இறப்பு அதிகரித்துள்ளது. 2019ல் 96 புலிகளும், 2020ல் 105 புலிகளும்,2021ல் 127 புலிகளும்,2022ல் 121 புலிகளும்,2023 ல் 178 புலிகளும் இறந்துள்ளன. இதில் 2012 முதல் அதிகம் புலிகள் பலியானது 2023ல் 178 புலிகள் அதிக பலியாகும்.புலிகளால் இதுவரை 348 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மஹராஷ்ட்டிராவில் மட்டும் 200 பேர் புலிக்கு பலியாகி உள்ளனர். 2022 கணக்கின்படி இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.