உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உத்தரகண்டில் 7 பேர் பலி

 பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உத்தரகண்டில் 7 பேர் பலி

டேராடூன்: உத்தரகண்டில் அல்மோரா அருகே பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். உத்தரகண்டின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள துவாரகாத் பகுதியில் இருந்து, நைனிடாலின் ராம்நகர் நோக்கி, 18 பயணியருடன் பஸ் ஒன்று நேற்று சென்றது. பிகியாசைன் அருகே சென்ற போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆறு பயணியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; டிரைவர் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழியில் மற்றொருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி