உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

காஷ்மீரில் வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகள் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்று மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்கள் கூட பிரதமர் மோடிக்கு ஆதரவளிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகள் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது.கடந்த ஓராண்டாக கல்வீச்சு சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, ககன்யான் திட்டத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட் தொற்று காரணமாக அது தாமதமானது. இருப்பினும், 2025ம் ஆண்டின் முதல் பாதியில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 08, 2024 01:11

மத்திய அரசு பயங்கரவாதிகளின் மீது கடுமையான நடவடிக்கை மேட்கொண்டு, வன்முறைகளை நூறு சதவிகிதம் குறைக்கவேண்டும்.


விடியல்
ஜன 07, 2024 14:33

சும்மா சொல்லிக்கொண்டே இருக்காதீங்க.ஒரேயடியாக இஸ்ரேல் பாணியில் தீவிர வாதிகளை ஒழித்து கட்டுங்க


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை