உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.7.77 கோடி வைரங்கள்

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.7.77 கோடி வைரங்கள்

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வைரம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், விமானத்தில் வந்திறங்கிய பயணியரை, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது இரு பயணியரின் சூட்கேஸ்களில், சிறிய பைகளில் வைத்திருந்த வைரங்கள் சிக்கின.அதை எடை பார்த்த போது 8,053 காரட் இருந்தது. அதன்மதிப்பு 7.77 கோடி ரூபாய். துபாயில் இருந்து கடத்தி வந்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4.62 லட்சம் ரூபாய், வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் பெயர், விபரம் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்