உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்

8 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில், 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முன்பு, வயதானவர்களுக்கு மட்டும் வந்த மாரடைப்பு, இன்று இளம் வயதினருக்கும் வரத் துவங்கி விட்டது. கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தாலுகாவில் உள்ள பாடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லிங்கராஜு - ஸ்ருதி தம்பதி. இவர்களின் ஒரே மகளான தேஜஸ்வினி, 8, தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.படிப்பில் ஆர்வத்துடன் இருக்கும் தேஜஸ்வினி, வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்றார். வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்களிடம் வீட்டுப் பாடங்களை காண்பிக்கும்படி ஆசிரியை கேட்டார்.அப்போது, தேஜஸ்வினி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். மேலும், சுயநினைவின்றி சிறுநீரும் கழித்து விட்டார். இதை பார்த்து ஆசிரியையும், சக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே, சிறுமியை அருகில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் துாக்கிச் சென்றனர். சிறுமியை சோதனை செய்த டாக்டர்கள், 'சிறுமி திடீர் மாரடைப்பால் இறந்து விட்டார்' என கூறினர்.தகவலறிந்து ஓடோடி வந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ardisson Sone
ஜன 07, 2025 12:57

O my god


M. PALANIAPPAN
ஜன 07, 2025 10:36

ஆழ்ந்த இரங்கல், குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


Kasimani Baskaran
ஜன 07, 2025 09:43

ஆழ்ந்த இரங்கல்கள். மழலையின் இழப்பில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் அந்த ஆண்டவனால் மட்டுமே கொடுக்க முடியும்.


ஆரூர் ரங்
ஜன 07, 2025 09:28

வளரும் இருதயம் தானாக செயலிழக்க வாய்ப்பில்லை. பிறவியிலேயே குறைபாடு இருந்திருக்கும்.


Barakat Ali
ஜன 07, 2025 06:35

வயதில் மூத்தவர்களுக்கு ரத்தநாளத்தில் அடைப்பு மற்றும் நீரிழிவு காரணமாக ஏற்படும் இதய நோய்களால் மாரடைப்பு ஏற்படலாம் ..... சிறுமிக்கு 8 வயதில் இந்தப் பிரச்னைகள் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவே .... தனியார் பள்ளி என்பதால் மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி காரணமாக இறந்திருக்கலாம் ....


Medimech Colposcope Thermo Coagulator
ஜன 07, 2025 06:34

இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கும் விதமாக அந்த ஆசிரியை முன் நாட்களில் மற்ற மாணவர்களுக்கு பனிஷ்மெண்ட் தந்திருப்பாரோ என்னவோ கற்றல் மட்டும் போதுமே..எதற்கு ஆயிரம் தேர்வு முறைகள்..சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தினமலர் வாசகர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.


Sivu, Chennai
ஜன 07, 2025 08:44

இருக்கலாம்.. உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கியதால் இறந்த ஒரு பிளாக்பக் மானைப்பார்த்து மற்ற சில மான்கள் அதிர்ச்சியில் இறந்ததாக படித்த நினைவு வருகிறது.


நிக்கோல்தாம்சன்
ஜன 07, 2025 05:18

ஐயோ என்ன ஒரு துக்கநிலை , எதனால் இந்த மாரடைப்பு என்று மருத்துவர்கள் அறிந்தார்களா? இல்லை ???


Ashanmugam
ஜன 07, 2025 10:50

பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் பிள்ளை எதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததற்கு உண்டான காரணத்தை கண்டறியாமல், தொட்டு பார்த்த உடனே மாரடைப்பில் இறந்தது என்று அனுப்பியது, டாக்டர் படிப்புக்கே மகா கேவலம். 1. 8 வயது இளம் பெண் குழந்தை போதிய நீர் சத்து குறைவுடீஹைடிரேஷன், மன சோர்வு, மன அழுத்தம், பயம்,பதற்றம், உடல் நடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம். 2. பள்ளியில் எதாவது டீச்சர், சக பிள்ளைகள் மூலம் எதாவது பிரச்சனை ஏற்பட்டு வெளியே சொல்லாமல் மனதிலே குமுறி இருக்கலாம். 3.தன்னை அறியாமலே மனதில் கிலி, டென்ஷன் படபடப்பு ஏற்பட்டு போஷாக்கு குறைவாக இருக்கலாம். 4. பிறவிலே இதய பிரச்சனை இருந்திருக்கலாம். இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் எடுத்த எடுப்பிலே மருத்துவர்கள் மாரடைப்பில் இறந்தது என முத்திரை பதிப்பது மருத்துவ தொழில் மகா கேவலம். உண்மையிலே இந்த மருத்துவர்கள் காசு லஞ்சம் தராமல் மெரிட்டிலே, ஒரு வருடம் கூட பெயில் ஆகாமல் மருத்துவ பட்டம் பெற்றார்களா என்ற சந்தேகம் வருகிறது. அறிவு ஆற்றல் திறமை புத்திசாலியான மருத்துவர்கள் உடனடியாக ஆய்வு செய்து காரணத்தை வெளி படுத்தி இருப்பார்கள்.


Vira
ஜன 07, 2025 05:17

Why homework for a girl child studying 3rd std? E Ve Ra should have stayed in his Karnataka only.


D Ravikumar
ஜன 07, 2025 06:38

Disgusting comment. Please keep petty politics away from peoples personal loss.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை