உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் 85 சதவீத கோடீஸ்வரர்கள் உயர்ஜாதியினர் : ஆய்வில் தகவல்

இந்தியாவில் 85 சதவீத கோடீஸ்வரர்கள் உயர்ஜாதியினர் : ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் 85 சதவீத கோடீஸ்வரர்கள் உயர் ஜாதியினராகவும், அதிக செல்வளம் கொண்டவர்களாக உள்ளதாகவும், இதில் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், பிற ஜாதியினர் குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.இந்திய செல்வளம் பகிர்வு மற்றும் வரி நீதி என்ற பெயரில் கடந்த 2014-15 முதல் 2022-2023 வரையிலான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் 85. 67 சதவீத கோடீஸ்வரர்கள் அதிக செல்வ வளம் கொண்டவர்களாக உயர்ஜாதியினரே உள்ளனர். இந்தியாவின் மொத்த செல்வ வளத்தில் 40 சதவீதத்தை உயர்ஜாதியினரே வைத்துள்ளனர். 1 சதவீதத்தினை பிற பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் வைத்துள்ளனர். இதனால் பொருளாதார ஏற்ற தாழ்வு அதிகரித்தும், சமத்துவமின்மையும் நிலவுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

எஸ் எஸ்
ஜூன் 27, 2024 11:38

எந்த அடிப்படையில் முடிவு செய்தனர்? தமிழ் நாட்டை பொறுத்த வரை உயர் சாதி என்று சொல்லப்படும் சமூக மக்கள் நடுத்தர பிரிவிலும் வறுமை கோட்டுக்கு கீழும்தான் உள்ளனர்


Lion Drsekar
ஜூன் 27, 2024 10:24

கல்வி வேலைவாய்ப்பு போன்று இவர்களை அங்கும் குறைக்க சட்டம் கொண்டுவரலாம் . வந்தே மாதரம்


தங்கம்
ஜூன் 27, 2024 04:58

எந்தெந்த ஜாதி உயர்ந்த ஜாதி, எந்தந்த ஜாதி தாழ்ந்த ஜாதி, எந்தந்த ஜாதி கேவலமான ஜாதி, எந்தெந்த ஜாதி கீழ்ஜாதி?


சண்முகம்
ஜூன் 26, 2024 23:07

" ஆய்வறிக்கை ஒன்றில்" என்று பெயர் குறிப்படாமல் இருப்பது ஏன்? புருடா தானே?


G Mahalingam
ஜூன் 26, 2024 22:59

தமிழ் நாட்டில் உயர் சாதிகள் 5 சதவீதம் தான். 3 சதவீத பிராமணர்கள் அத்தனை பேரும் வேலைதான் பார்க்கிறார்கள். திமுக அமைச்சர்கள் முதல் திமுக கவுன்சிலர் பணம் எல்லாம் கணக்கில் வராதா


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2024 22:54

கஷ்டப்பட்டு ஒருவர் படித்து உழைத்து முன்னேறி, பணம் சம்பாரிப்பாராம். இன்னொருவர் படுத்துகிட்டு கோட்டாவில் இடம் கிடைத்து அரசு வேலையில் லஞ்சம் வாங்கி சொகுசா இருப்பாராம். பின்னர் கோடீஸ்வரர் உயர்சாதி என்று சாதிவாரியாக மக்களை பிரிப்பார்களாம். இந்த சாதி அரசியலை எப்போது ஒழிக்க போகிறோம்? சாதி அரசியலை வைத்து தான் திராவிட அரசியல் நடக்கிறது.


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 22:03

திமுக அதிமுக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட எல்லோரும் OBC வகுப்பினர்தான். பினாமி பெயர்களிலும் கறுப்புப் பணமாகவும் இருப்பதால் இந்த சர்வேயில் இல்லை. அவ்வளவுதான்.


S. Gopalakrishnan
ஜூன் 26, 2024 21:46

நாற்பது சதவீதம் உயர் ஜாதியினரிடம் உள்ளது.‌ ஒரு சதவீதம் பிற ஜாதினரிடம் உள்ளது. மீதி ஐம்பத்து ஒன்பது சதவீதம் இத்தாலியில் உள்ளது போலும்‌ !


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:23

கோல்மால்புரத்தை விட்டுட்டீங்களே ?? நீங்க சொல்றதை வெச்சு அதன் அடிமைகளுக்கு ஓசி பிரியாணி கட் பண்ணிட போறாங்க ....


SIVA
ஜூன் 26, 2024 21:38

இங்கு தமிழ்நாட்டில் ஒரு ட்ரில்லியன் குடும்பம் அனைத்து ஜாதியிலும் சம்பந்தம் செய்து உள்ளது அதை எந்த கணக்கில் சேர்ப்பீர்கள் , அப்படியே தீவரவாதம் மற்றும் ஊழல் எந்த ஜாதி , எந்த மதம் எத்தனை சதவிகிதம் செய்கின்றது என்று கணக்கு சொல்லவும்


Barakat Ali
ஜூன் 26, 2024 21:27

ஆய்வை நடத்திய அமைப்பு எது? தெரியாது .... எந்த அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தினார்கள்? தெரியாது .... ஆதாரம்? தெரியாது .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை