மேலும் செய்திகள்
ஈட்டி எறிதலில் ஜொலிக்கும் ராணுவ வீரர் டி.பி.மனு
24-Jan-2025
பொதுவாக நல்ல உடல்வாகு கொண்டவர்களை விட, மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல்வேறு வழிகளில் முயற்சி செய்வர். இவர்களில் ஒருவராக இருப்பவர் ரமேஷ் ஜாதவ், இடது கை இல்லாத மாற்றுத்திறனாளி. ஆனால், விளையாட்டில் அசத்தி வருகிறார்.நாளை துவங்கி 4ம் தேதி வரை துபாய் சார்ஜாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச பாரா தடகள போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டியில் கலந்து கொள்ள, இந்தியா சார்பில் ரமேஷ் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஈட்டி எறிதல் வீரரான இவர் தனது திறமையை வெளிப்படுத்த காத்துதிருக்கிறார்.போட்டிகளில் கலந்து கொள்ள இன்று சார்ஜா புறப்படுகிறார். கடந்த 2023ல் தாய்லாந்தில் நடந்த தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, ஈட்டி எறிதலில் ரமேஷ் ஜாதவ் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். இம்முறையும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றும் முனைப்புடன் சார்ஜாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவர் வெற்றி மாலையுடன் திரும்ப வாழ்த்துவோம்.- -நமது நிருபர் - -
24-Jan-2025